india

img

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்...  திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது..  

கொல்கத்தா 
தமிழகத்தை போலவே மேற்குவங்க மாநிலத்திலும் 8 கட்டங்களாக மார்ச் 27-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளுங்கட்சியான  திரிணாமுல் காங்கிரஸ், மத்தியில் ஆளும் பாஜக, இடதுசாரி - காங்கிரஸ் என  மூன்று துருவங்களாக போட்டியிடுவதால் அங்கு மும்முனை போட்டி நிலவி வருகிறது. 

இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 291 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். 

பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளர்களில் பெண்கள்  50 பேரும், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த  42 பேரும் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

;