india

img

திரிணாமுல் காங்கிரசின் வன்முறை வெறியாட்டங்கள்.... சீத்தாராம் யெச்சூரி கண்டனம்....

புதுதில்லி:
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்மேற்கொண்டு வரும் வன்முறை வெறியாட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜிதின் பிரசாதாமற்றும் பாஜக சார்பில் அதன் தலைவர் நட்டாகண்டித்துள்ளார்கள். பிரதமர் மோடி இது தொடர்பாக மேற்கு வங்க ஆளுநரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபின்பு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலம் முழுதும்வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. ஜமால்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர் தோழர் காகாளி கேத்ரபால் கொல்லப்பட்டார். வடக்கு24 பர்கானா மாவட்டத்தில் துத்தாபுக்கூரில் ஹசனுசாமன் என்னும் தொழிலாளி கொல்லப்பட்டார். பல்வேறு வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.  இவ்வாறு மாநிலம் முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

இவை  தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தன் ட்விட்டர் பக்கத்தில்கூறியிருப்பதாவது: “வங்கம் முழுவது மிருந்து வன்முறை வெறியாட்டங்கள் குறித்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதுதான் வெற்றிக் கொண்டாட்டங்களா? இது கண்டிக்கத்தக்கது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக திரிணாமுல் காங்கிரஸ் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. மாறாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும்போல் மக்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்திடவும், உதவி செய்திடவும், நிவாரணம் அளிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.” இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி கண்டனம்
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மேற்கு வங்கத்திற்குப் பொறுப்பு வகிக்கும் ஜிதின்பிரசாதா, “காங்கிரஸ் கட்சியின் மீது திரிணாமுல் காங்கிரசார் கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறை வெறியாட்டங்களை ஏற்க முடியாது. அவர்கள் பெண்களையும், குழந்தைகளையும்கூட விட்டுவைக்கவில்லை. இவ்வாறு சட்டம்-ஒழுங்கு சீர்குலைவதற்காக மேற்கு வங்க மக்கள் வாக்களிக்கவில்லை,” என்று கூறியுள்ளார்.பாஜக-வின் தேசியத் தலைவர் நட்டா, வன்முறையில் பாதிக்கப்பட்ட பாஜககுடும்பத்தினரைப் பார்ப்பதற்காக மேற்கு வங்கத்திற்கு விரைந்திருக்கிறார். பிரதமர் மேற்கு வங்க ஆளுநரிடம் தொலைபேசி மூலமாக வன்முறைகள் குறித்து விசாரித்திருக் கிறார்.      (ந.நி.)

;