india

img

கோகைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கு.... பாஜக தலைவர் ராகேஷ் சிங், அவரது 2 மகன்களுடன் கைது...

கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில், பாஜக இளைஞரணி பொதுச்செயலாளரும், அக்கட்சியின் முன்னணிஇளம்பெண் தலைவருமான பமீலா கோஸ்வாமி (23), கடந்த சில நாட்களுக்கு முன்பு, காரில் போதைப் பொருள் கடத்தி, கையும் களவுமாக சிக்கினார். 

ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கோகைன் போதைப் பொருளை அவரிடமிருந்து போலீசார் கைப்பற்றினர்.இதுதொடர்பான வழக்கில், பமீலா கோஸ்வாமி மட்டுமன்றி அவரது நண்பர் பிரபீர் குமார் தே (38), பாதுகாவலர் சோம்நாத் சாட்டர்ஜி (26) ஆகியோரும் நியூ அலிப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.பமீலாவும், பிரபீர் குமாரும் நீண்டகாலமாக போதைப் பொருள் கடத்தி வருகிறார்கள் என்று பமீலாவின் தந்தை கவுசிக் கோஸ்வாமிதான் தங்களுக்கு தகவல் அளித்ததாக
வும், அதைத்தொடர்ந்து கடந்த 2020 ஏப்ரல் முதல் அவர்கள் இருவரையும் கண்காணித்து, தற்போது கையும் களவுமாக கைது செய்துள்ளோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கோகைன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில், முக்கியச் சதிகாரராக பாஜக-வின் மற்றொரு முக்கியத் தலைவரான ராகேஷ் சிங்கையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு கிழக்கு பர்துவானில் உள்ள கல்சியில் ராகேஷ் சிங்கை சுற்றி வளைத்த போலீசார், அவரிடமிருந்தும் போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.முன்னதாக, ராகேஷ் சிங்கை கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்றபோது, போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்த, அவரது மகன்கள் சாகேப் சிங் (22), சோஹம் சிங்(24) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.பாஜக தலைவர் ராகேஷ் சிங் மீது, ஏற்கெனவே 25-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. மே 2019-இல் அமித் ஷாவின் பேரணியின் போது வன்முறையில் ஈடுபட்ட கும்பலுக்கு தலைமை வகித்தவரும் ராகேஷ் சிங்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

;