india

img

காலத்தை வென்றவர்கள் : வங்க எழுத்தாளர் சரத்சந்திரர் நினைவு தினம்...

புகழ்பெற்ற எழுத்தாளர் சரத்சந்திர சட்டோபாத்யாயா 1876 செப்டம்பர் 15ல் மேற்கு வங்காளம் ஹூக்லி மாவட்டம் தேவானந்தபூரில் பிறந்தார். இளம் வயதிலேயே கதைகளை எழுதத் துவங்கினார். பர்மாவில் அரசாங்க எழுத்தராக பணிபுரிந்தார். சிறுகதைப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசை வென்றார்.

இவர் இருபதாம் நூற்றாண்டின் வங்காள மொழி இலக்கியத்தில் ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். விளிம்புநிலை மக்களின் இலக்கியங்களைப் படைத்ததற்காக ரவீந்திரநாத் தாகூரால் பெரிதும் பாராட்டப் பெற்றார். சரத்சந்திரர் ஏழையாகப் பிறந்தார். இவர் எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவராகவும் இருந்தார். சரத்சந்திரர் மகாத்மா காந்தியை விமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ்இயக்கத்தில் சேர்ந்து, ஹவுரா மாவட்டக் காங்கிரஸ் இயக்கத் தலைவராகவும் ஆனார். அவருடைய பதேர் தோபி(வழி வேண்டுவோர்) எனும் நூல் அக்கால புரட்சியாளர்களால் மிகவும் விரும்பப்பட்ட  புத்தகமாகும். ஆங்கிலேய அரசால் இப்புத்தகம் தடை செய்யப்பட்டது.

இவர் 1938 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் நாள் காலமானார். அவரது புகழ்பெற்ற நாவல் தேவதாஸ் அவரை என்றென்றும்நினைவுபடுத்திக் கொண்டிருக்கும்.

===பெரணமல்லூர் சேகரன்==

;