india

img

200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொல்லப்பட்ட போது பிரபல ‘தேசபக்தர்கள்’ வாய்திறக்கவில்லையே... கே.கே.ராகேஷ்

திருவனந்தபுரம்:
நாட்டின் விவசாயிகள் இரண்டரை மாதங்களாக போராடி வருகிறார்கள், அப்போதெல்லாம் இந்தியாவில் ‘பிரபலங்கள்’ அமைதியாக இருந்தனர் என்று  நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.ராகேஷ் தெரிவித்துள்ளார். போராட்டத்திற்கு ஒருமைப்பாடு அறிவித்த உலகப் புகழ்பெற்ற சமூக ஆர்வலர்களுக்கு எதிராக சில பாலிவுட் நட்சத்திரங்களும் கிரிக்கெட் வீரர்களும் பிரச்சாரம் செய்ததன் பின்னணியில் ராகேஷின் இந்த முகநூல் பதிவு வந்துள்ளது.

கடந்த இரண்டரை மாதங்களாக, இந்தியாவில் விவசாயிகள் அரசாங்கத்தின் கார்ப்பரேட் சார்பு சட்டங்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முற்றிலும் அமைதியான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டனர். பலரின் தற்கொலை போராட்டத்தை கொளுந்துவிட்டு எரியத் தூண்டியது. இந்தியாவில் பாசிச ஆட்சி ஒரு தடயமும் இல்லாமல் போராட்டத்தை அடக்கி ஒடுக்க முயன்றது. வயதான விவசாயிகள் கூட கொடூரமான தாக்குதலை எதிர்கொள்கின்றனர். மிகப்பெரிய கோட்டைகள், முள்வேலி, தடுப்புகள் மற்றும் இரும்புக் கம்பிகளைக் கொண்டு எதிரி இராணுவம் போல அரசாங்கம் விவசாயப் போராட்டத்தை எதிர்கொள்கிறது.

அப்போதெல்லாம் பிரபலங்கள் வாய்திறக்கவில்லை. முதுகெலும்பு நேராக நிற்கவில்லை.  முன்னெப்போதும் காணாத அடக்குமுறை, உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளாக மாறியபோது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களும், உலகப் புகழ்பெற்ற கலைஞர்களும் சிந்தனையாளர்களும் உலகம் முழுவதும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியதும், ‘தேசபக்தி’ யை அடக்கி வைக்க முடியாமல் சில ‘தெய்வங்கள்’ அறிக்கைகளுடன் களமிறங்கியிருக்கிறார்கள். மேலும் பலர் அந்த வழியில் வருவார்கள் என்று நம்புகிறேன்.

விவசாயிகளின் இந்த போராட்டம் சிம்மாசனங்களை கைப்பற்றுவதற்காக அல்ல, வாழும் உரிமைக்காக மட்டுமே என்று கே.கே.ராகேஷ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

;