india

img

கேரளத்தில் கடுமையான கட்டுப்பாடு.... கூட்டங்களை தவிர்க்க அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு....

திருவனந்தபுரம்:
கோவிட் தொடர்ந்து பரவுவதை அடுத்து, கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பராமரிக்க கேரள அனைத்து கட்சி கூட்டம் முடிவு செய்துள்ளது. நோய் பரவுவதை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்த கூட்டம் முழு ஆதரவை தெரிவித்துள்ளது.

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இப்போது முழு ஊரடங்கு கூடாது என்ற அரசாங்கத் தின் நிலைப்பாட்டை பகிர்ந்து கொண்டனர். ஆனால் தற்போதைய மோசமான சூழ்நிலையைப் பொறுத்தவரை, இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். கோவிட்டுக்கு எதிரான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது அனைத்து கட்சி கூட்டத்தின் பொதுவான வேண்டுகோளாகும்.வாக்குகள் எண்ணப்படும் மே 2ஆம் தேதியும் அடுத்தடுத்த நாட்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கொண்டாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றுகூட்டம் ஒருமனதாக ஒப்புக் கொண்டது. தொடர்புடைய பொறுப்புகளைக் கொண்டவர் கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குச் செல்ல வேண்டும். பொதுமக்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.வாக்குகளை எண்ணுவதற்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்தைஅணுக முடியும். இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்தவர்களும், 72 மணி நேரத்திற்குள் ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கோவிட்இல்லை என உறுதி செய்தவர்களும் வாக்கு எண்ணும் மையத் தில் அனுமதிக்கப்படுவார்கள். அதிகாரிகளுக்கும் இது பொருந் தும். அனைத்து விதமான கூட்டங்களையும் தவிர்ப்பது நோய் பரவாமல் தடுப்பதற்கான மிகமுக்கியமான வழிகளில் ஒன்றாகும்.

மூடிய அரங்குகளில் நோய் பரவுவதற்கான அதிக ஆபத்து இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது, திருமண விழாக்களுக்கு அதிகபட்சம் 75 பேர் அனுமதிக்கப்படுகிறார்கள். சிக்கலான சூழ்நிலையைக் கருத் தில் கொண்டு அதை 50 ஆகக் குறைக்கலாம் என முடிவானது. திருமணங்களையும், புதுமனைபுகுவிழாவினையும் நடத்துவதற்கு முன்கூட்டியே ‘கோவிட் ஜாக்ரதா’ போர்ட்டலில் பதிவு செய்யமுடிவு செய்யப்பட்டது. மரணத் திற்குப் பிந்தைய இறுதி நிகழ்ச்சிகளுக்கு அதிகபட்சம் 20 பேர் பங்கேற்கலாம். எக்காரணம் கொண் டும் அதிகபட்ச எண்ணிக்கைக்கு அப்பால் செல்ல வேண்டாம்.

வழிபாட்டுத் தலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் தேவை.ரமலான் நெருங்கி வருவதால் பொதுவாக மசூதிகளில் கூட்டமாக இருக்கும். தற்போதைய சூழ் நிலையில், அதிகபட்சம் 50 பேர் பங்கேற்கலாம். சிறிய வழிபாட்டுத்தலம் என்றால், எண்ணிக்கையை குறைக்க வேண்டியிருக்கும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மதத் தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும். தொழுகைக்குப் போகிறவர் கள் தங்கள் சொந்த பாயைக் கொண்டு வருவது நல்லது. உடல்
சுத்திகரிப்புக்கு தொட்டி நீருக்குபதிலாக குழாய் நீரைப் பயன் படுத்த வேண்டும். பல மசூதிகள்ஏற்கனவே இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு இணங்க ஏற்பாடுகள் செய்துள்ளன. வழிபாட்டுத் தலங்களில் உணவு மற்றும் தீர்த்தம் வழங்கும் நடைமுறையை இப்போதைக்கு கைவிட வேண்டும்.

திரைப்பட அரங்குகள், வணிகவளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கிளப்புகள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக் கள், பார்கள் மற்றும் வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையங்கள் போன்றவற்றின் செயல்பாடுகள் நிறுத்தப்படும். அனைத்து கூட்டங்களும் ஆன்லைனில் மட்டுமேநடத்தப்பட வேண்டும். அரசுதொடர்பான கூட்டங்கள் ஏற்கனவே முழுமையாக ஆன்லைனில் நடத்தப்படுகின்றன. அரசு அலுவலகங்களில் 50 சதவிகிதம் ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரம், வருவாய், காவல் துறை மற்றும் பிற பேரிடர் மேலாண்மை அலுவலகங்கள் தினசரிஅடிப்படையில் செயல்பட வேண்டும். தனியார் நிறுவனங்களும் அவற்றின் ஊழியர்கள் எண்ணிக்கையை முடிந்தவரை மட்டுப் படுத்த வேண்டும்.மரபணு மாற்றமடைந்த - அதிக தொற்று ஏற்படுத்தும் வைரஸ் மாநிலத்தின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய பகுதிகள் முழுமையாக மூடப்பட வேண்டும். கூட்டமாக இருக்கும் அனைத்து சமூக-கலாச்சார மற்றும் அரசியல் நிகழ்வுகள் மற்றும் மத விழாக்கள்தவிர்க்கப்பட வேண்டும். வார இறுதியில் விதிக்கப்பட்ட ஊரடங் குக்கு ஒத்த கட்டுப்பாடுகளுடன் மக்கள் நன்கு ஒத்துழைத்து வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் வார இறுதியில் சிறப்பு கட்டுப்பாடு தொடரும். அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அன்று கிடைக்கும். சனிக்கிழமை அரசு மற்றும் சார்பு நிறுவனங்களுக்கு விடுப்பு வழங்கவும் அனைத்துக் கட்சி கூட்டம் முடிவு செய்தது.

;