india

img

அபுதாபி அரசுமுறை கூட்டத்தில் சங் பரிவார் பேர்வழி ஸ்மிதா மேனன்... மத்திய பாஜக அமைச்சரின் சட்ட மீறலை மறைக்க முயற்சி....

கோழிக்கோடு:
அரசுமுறைப் பயணத்தில், சட்டவிதிமுறைகளை மீறி தனக்கு வேண் டிய இளம் பெண் உடன் அழைத்துச் சென்றதுடன், அவரை கூட்டத்திலும் பங்கேற்ற வைத்ததாக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி. முரளீதரன் மீது குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் ரிம் அசோசியேஷன்  (ஐஓஆர்ஏ) என்பது ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், கொமொரோஸ், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், கென்யா, மடகாஸ்கர், மலேசியா, மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொசாம்பிக், ஓமான், சீஷெல்ஸ், சிங்கப்பூர், சோமாலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, தான்சானியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 22 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள அமைப்பாகும். 

அந்த வகையில், ஐஓஆர்ஏ உறுப்புநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம், 2019  நவம்பர் 7அன்று அபுதாபியில் “பகிரப்பட்ட விதியை ஊக்குவித்தல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் செழிப்புக்கான பாதை” என்ற தலைப்பில் நடைபெற் றது.இதில் இந்திய வெளியுறவுத்துறைஅமைச்சர் வி.முரளீதரன் பங்கேற் றார். தனது சொந்த விருப்பத்தின் பேரில்ஸ்மிதா மேனன் என்கிற 19 வயது பிஆர் நிறுவன மேலாளரை  சட்டவிரோதமாக அந்த கூட்டத்தில் பங்கேற்கச் செய்தார். 

அமைச்சர்கள் இடம்பெற்ற மேடையில் ஸ்மிதா மேனனுக்கு இடம் ஒதுக் கப்பட்டிருந்தது. இது சட்டவிரோதம் என்பதை சுட்டிக்காட்டி  இந்திய வெளியுறவுத்துறைக்கு லோக் தாந்த்ரிக் யுவ ஜனதா தளத்தின் தேசியத் தலைவர் சலீம் மடவூர் புகார்அளித்திருந்தார். எனினும் முரளீதரனின் மீதான குற்றச்சாட்டை மூடிமறைக்கும் முயற்சியில் வெளியுறவுத்துறை ஈடுபட்டுள்ளது.இதுதொடர்பாக லோக் தாந்த்ரிக் யுவ ஜனதா தளத்தின் தேசியத் தலைவர் சலீம் மடவூர் அளித்த புகாரை ஒருமாதத்திற்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய விஜிலென்ஸ் ஆணையம், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், மூன்று மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சலீம் மாதவூர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி எழுப்பிய கேள்விக்கும் பதிலில்லை.

மாறாக, மத்திய விஜிலென்ஸ் ஆணையத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 20 அன்று பதில் எழுதியுள்ள வெளியுறவுத்துறை, தங்களுக்கு கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்று மறைத்துள்ளது.இது மத்திய அமைச்சர் முரளீதரனைக் காப்பாற்றும் ஒரு மோசமான முயற்சி என்று சலீம் மாதவூர் குற்றம்சாட்டியுள்ளார். ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்று நடந்துள்ளதாக கூறும் அவர், முரளீதரனுக்கு தனக்கு எதிரான புகார் குறித்து தெளிவான விசாரணைக்கு தயாராக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து கேள்வி எழுப்பிய ஊடகங்களுக்கு பதிலளித்துள்ள ஸ்மிதா மேனன், “தன்னை ஒரு சங்பரிவார் குடும்பத்தைச் சேர்ந்தவர்” என தெரிவித்துள்ளார்.

;