india

img

மத்திய தடுப்பூசிக் கொள்கைக்கு கேரளத்தில் எதிர்ப்பு.... போராட்ட மையங்களான வீட்டு முற்றங்கள்...

கொச்சி:
வீட்டு முற்றங்களையே போராட்டக் களமாக மாற்றி, மத்திய அரசின் தடுப்பூசி கொள்கைக்கு எதிராக கேரள மக்கள் திரண்டெழுந்தனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அழைப்பு விடுத்திருந்த, இந்த வீட்டு முற்றப் போராட்டத்தில், அவரவர் இல்லம் முன்பாகவே மக்கள் திரண்டு மோடி அரசுக்கு தங்களின் எதிர்ப்பைக் காட்டினர்.மத்திய பாஜக அரசின் தடுப்பூசிக் கொள்கையானது, தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு தடுப்பூசியை விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்க அனுமதிக்கிறது. தடுப்பூசிகளை இலவசமாக மக்களுக்கு வழங்கி வந்த முந்தைய நடைமுறையை மோடி அரசு கைவிட்டுள்ளது. இந்நிலையில், ஏழை மக்களுக்குதடுப்பூசியை மறுக்கும் பாரபட்சமான இந்த அணுகுமுறையை கைவிட்டு மத்திய அரசு தனது தடுப்பூசிக் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பதாகைகளை ஏந்தினர்.புதனன்று மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை பல ஆயிரம் குடும்பங்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

;