india

img

‘மகளிர் கேரளம்’ இயக்க நிறைவாக இன்று வெகுமக்கள் கூட்டியக்கம்... வன்முறைக்கு எதிராக ஒன்றுபட விஜயராகவன் அழைப்பு....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜூலை 1 முதல் நடத்திவரும் ‘மகளிர் கேரளம்’ பிரச்சாரஇயக்கத்தின் நிறைவு நாளையொட்டி, வியாழனன்று (ஜூலை 8)கிளை மற்றும் உள்ளூர் மையங்களில் வெகுமக்கள் கூட்டியக்கம் நடைபெறுகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில பொறுப்புச் செயலாளர் ஏ. விஜயராகவன் கூறியிருப்பதாவது:

கேரளத்தில் அதிகரித்து வரும்வரதட்சணை ஒடுக்குமுறை மற்றும்பெண்ணிய விரோத மனப்பான் மைக்கு எதிரான சமூக மனசாட்சியைதட்டி எழுப்புவதும், பாலின நீதிக்கான உயர்மதிப்பிற்கு நாட்டைஉயர்த்துவதற்காகவும் ‘மகளிர் கேரளம்’ பிரச்சாரஇயக்கத்தை கடந்த ஒருவாரமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது.

கேரளத்தை பெண்களுக்குமான சமூகமாக மாற்றும் இந்தவிழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தில்கடந்த ஒருவாரத்தில் லட்சக்கணக் கான செயற்பாட்டாளர்கள் திரண்டனர். வீடு, வீடாக நடத்தப்பட்ட பிரச்சாரத்தில் வெகுமக்கள் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டது. விலை பேசாமலும் எளிமையாகவும் திருமணங்கள் நடக்கவேண்டும்; திருமணங்களை வணிகமயமாக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில், கேரளாவை வரதட்சணை எதிர்ப்பு சமூகமாக மாற்றியமைக் கும் வகையில் நடைபெற்ற ‘மகளிர்கேரளம்’ பிரச்சார இயக்கம், நிச்சயமாக எதிர்காலத் தலைமுறை நன்றிதெரிவிக்கத்தக்கதாக இருக்கும். குடும்ப வன்முறை மற்றும் சிறுவர்களை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராகவும் உறுதியான நிலைப் பாட்டை மேற்கொள்ளவும் இந்த பிரச்சாரம் உதவும்.

எனவே, பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக- பிரச்சார இயக்கத்தின் நிறைவு நாளில் நடைபெறும் வெகுமக்கள் கூட்டியக்கத்திலும் கேரள சமூகம் ஒன்றுபட வேண்டும். கிளை மற்றும் உள்ளூர் மையங்களில் நடைபெறும் ‘மகளிர் கேரளம்’ வெகுமக்கள் கூட்டியக்கத்தில் பெருமளவிலான மக்கள் பங்கேற்று விளக்கு ஏற்றி ‘மகளிர் கேரளம்’ உறுதிமொழி ஏற்பார்கள். கிளைகளை மையப்படுத்தி கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி உறுதிமொழி ஏற்பு நடக்கும். இவற்றில் கலந்துகொள்ள முடியாதவர்கள் தங்கள் வீடுகளிலேயே கூடி உறுதிமொழி ஏற்பில் பங்கேற்பார்கள்.இவ்வாறு விஜயராகவன் கூறியுள்ளார்.

;