india

img

அதிக ஊதியம், உயர்ந்த வாழ் நிலை, நல்ல பணிச்சூழல்... ‘விருந்தினர் தொழிலாளர்களின்’ சொர்க்கமாக கேரளம்....

கொச்சி:
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தினக்கூலிகளாக கேரளத்திற்கு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு கேரளத்தில் வழங்கப்படும் அதிக தினசரி ஊதியங்கள், சிறந்த வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகள் முக் கிய காரணங்கள் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கேரள மக்கள் அங்குள்ள வெளிமாநில தொழிலாளர்களை அதிதி (விருந்தினர்) தொழிலாளர்கள் என்றே குறிப்பிடுவது வழக்கம். அதுபோலவே அவர்கள் நடத்தப்படுகிறார்கள் என்பதை கோவிட் காலம்உலகுக்கு உணர்த்தியது. மற்ற மாநிலங்களில் உணவும் உறைவிடமும் கிடைக்காமல் சொந்த ஊர்களை நோக்கி பலநூறு கிலோ மீட்டர் தூரத்தை கால்நடையாக கடந்து சென்ற காட்சியை உலகம் கண்டது. ரயில் பாதைகளிலும், சாலை ஓரங்களிலும் தளர்ந்து விழுந்து.. விபத்தில்சிக்கி…, தற்கொலை செய்து கொண்டு.. ஏராளமானோர் பலியாகினர். அத்தகைய நிகழ்வுகள் ஏதும்கேரளத்தில் நடக்கவில்லை. சொந்தஊர்களுக்கு செல்ல விரும்பியவர் களுக்கு மாநில அரசே பயண காலத்துக்கு தேவையான உணவும், தண்ணீரும் கரிசனத்துடன் வழங்கிவிருந்தினரைப்போல வழியனுப்பியக் காட்சியும் மறக்க முடியாதது. சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் தங்கள் குடும்பத்தினரை சந்தித்துவிட்டு போக்குவரத்து சீரானதும் கேரளம் திரும்பினர்.

இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்களின் குறிப்பாக வடக்கு கிழக்கு மாநிலங்களிலிருந்து கேரளத்திற்கு அதிக அளவில் வருவது குறித்து கொச்சியில் உள்ள சமூக-பொருளாதார சுற்றுச்சூழல் ஆய்வு மையம் (சிஎஸ்இஎஸ்) ஆய்வுநடத்தியது. அதில், ஆண்டு முழுவதும் வேலை கிடைப்பது, பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு திறன்களை அணுகுவது, பிற மாநிலங்களில் உள்ளதுபோன்ற பாகுபாடு இல்லாதது. மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஆகியவை அவர்களது வருகைக்கு காரணிகளாக இருப்பதைக் கண்டறிந்துள் ளது. இத்தகவலை ஆய்வுக்கு தலைமை வகித்த சிஎஸ்இஎஸ் இயக்குநர் டாக்டர் எஸ்.கே. என் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தொழிலாளர் பணியகத்தின் தகவல்படி, அதிகபட்ச சராசரி தினசரி ஊதியம் கேரளத்தில் ரூ.767.50. தேசிய சராசரி ரூ.320.85 மட்டுமே. தமிழ்நாடு ரூ.577.38, இமாச்சலப் பிரதேசம் ரூ.501. ஜம்மு-காஷ்மீர் ரூ.450. குஜராத்தில் தினசரிஊதியம் ரூ.265, உ.பி. ரூ.247.03, ஒடிசாவில் ரூ.239.29, மத்திய பிரதேசத்தில் ரூ.222.01.கேரளத்தில் கல்வி கற்றோர் அதிகமாக இருப்பதால், பிற நாடுகளில் வேலை தேடும் புலம்பெயர்ந்தோரின் விகிதம் அதிகரித்து வருகிறது. 20 முதல் 34 வயதுக்குட்பட்ட தொழிலாளர்கள் கிடைப்பது 1991 இல் 50 சதவிகிதமாகவும், 2011 இல் 38 சதவிகிதமாகவும் இருந்தது. விரைவான நகரமயமாதல் உதிரி தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. நீண்ட கால வேலைவாய்ப்பு காரணமாக, திறமையற்ற தொழிலாளர்கள்மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் திறமையான தொழிலாளர் களாக மாறிவிடுகிறார்கள் என்றும் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

;