india

img

தாய் பிறருக்காக தியாகம் செய்ய வேண்டும் என்பது ஆணாதிக்க சமுதாயத்திற்கு சொந்தமான கருத்து....

கொச்சி:
அம்மா என்றால் மற்றவர் களுக்காக தியாகம் செய்ய வேண்டியவர் என்கிற பொதுவான கருத்து உள்ளது. இது நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தின் எச்சங்களாக இருக்கும் ஆணாதிக்க சமுதாயத்துக்கு சொந்தமானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பாலின சமத்துவமின்மையைப் பயன்படுத்தி லாபத்தை ஈட்டும் முதலாளித்துவம் இங்கு உள்ளது. பழமைவாத விழுமியங்களிலிருந்து தாய்மை என்ற கருத்தை முதலாளித்துவம் உருமாற்றியுள்ளது என்று அன்னையர் தினத்தில் (மே 9) தனது முகநூல் பதிவில் பினராயி விஜயன் தெரிவித்தார். “இந்த மரபுவழி கருத்தைமகிமைப்படுத்துவது என்கிற பெயரில் பெண்களின் இயல்பையும்சுதந்திரத்தையும் கைப்பற்று வதற்கான ஒரு வழியாக மாறி வருகிறது. குடும்பத்தில் எல்லாவற்றிலும் பெண்கள் மற்றும் ஆண்கள் சமமான பங்கை வகிக்க வேண்டும், அது சமையலறை வேலை, குழந்தை பராமரிப்பு அல்லது நிதி விஷயங்களாக இருக்கலாம். ஒருவரின் தியாகம் மற்றொருவரின் சுதந்திரமாகமாறக்கூடாது” என்றும் பினராயி கூறினார்.

“நமக்கு வழிகாட்டும் நீதி போதனைகளை சரிசெய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒருவரின் சொந்தக்கருத்துக்களையும் பழக்க வழக்கங்களையும் சரிசெய்வது ஒரு கடின மான பணியாகும். இடதுசாரிகள் முன்வைக்கும் பாலின சமத்துவத்தின் உன்னதமான கொள்கைகளை சொந்த வாழ்க்கையில் திறம்பட செயல்படுத்துவதற்கான முக்கிய பொறுப்பாக அரசியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இந்த அன்னையர் தினத்தன்று, வீட்டின் சுவர்களுக்கு வெளியே பரந்த உலகிற்கு வருமாறு தாய்மார்களை நாம் வரவேற்கலாம். இன்னொருவரின் நன்மைக்காக தன்னைத் தியாகம் செய்யத் தயாரான அன்னையராக ஒவ்வொருவராலும் முடியும். கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளித்து புதிய கேரளாவை நோக்கி செல்ல அந்த தியாக ஆற்றல் நம்மை உற்சாகப்படுத்தட்டும். என் இதயத்தின் ஆழத்தில் இருந்து அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்”  என்று முதல்வர் பினராயி விஜயன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

;