india

img

பிரபுல் படேலை, மோடி அரசு உயிரி ஆயுதமாக பயன்படுத்துகிறதா? லட்சத்தீவு திரைப்பட பெண் இயக்குநர் ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு....

கவரட்டி:
‘பிரபுல் படேல் என்ற கொரோனாவைரஸை, லட்சத்தீவு மக்களுக்கு எதிரான உயிரி ஆயுதமாக ஒன்றியஅரசு பயன்படுத்துகிறது!’ என்றுதிரைப்பட இயக்குநரும், நடிகையுமான ஆயிஷா சுல்தானா குற்றம் சாட்டியிருந்த நிலையில், அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் லட்சத்தீவுக்குகடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக-வைச் சேர்ந்த பிரபுல் ஹோடா படேல் புதிய அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய விதிமுறைகள் என்ற ஒன்றைக் கொண்டு வந்த பிரபுல் படேல், கடற்கரையில் மீனவர்கள் குடில்கள் அமைக்கத் தடை, இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றால், அவர்கள்தேர்தலில் நிற்கத் தடை, மாட்டிறைச்சிக்குத் தடை, குண்டர் சட்டம் என பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளில் இறங்கியதுடன், லட்சத்தீவில்இதுவரை இல்லாத மதுபான விற்பனைக்கும் அனுமதி அளித்தார். வெளிநாட்டு நிறுவனங்கள் ரிசார்ட் தொழில் நடத்தவும் லட்சத்தீவை தாரைவார்த்தார்.

இதற்கு எதிராக நாடு முழுவதும்போராட்டங்கள் நடைபெற்றதை யடுத்து, தற்போது லட்சத்தீவு மேம்பாட்டு விதிமுறைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், லட்சத்தீவுகளில் ஒன்றான ஷட்லட் தீவைச்சேர்ந்த பெண் இயக்கு நரும், நடிகையுமான ஆயிஷா சுல்தானா ‘மீடியா ஒன்’ என்ற  மலையாள தொலைக்காட்சி விவாதம் ஒன்றில்கலந்து கொண்டு பேசினார். அப்போது, ‘கொரோனா வைரசை லட்சத்தீவு மக்களுக்கு எதிரான உயிரி  ஆயுதமாக (Bio Weapon) ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது’ என்றும், ‘அந்த கொரோனா உயிரி ஆயுதம் பிரபுல் ஹோடா  படேல் தான்!’ என்றும் குற்றம்சாட்டினார்.இதற்காக, ஆயிஷா சுல்தானா மீது லட்சத்தீவு போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வெறுப்புணர்வை தூண்டுதல் உள்ளிட்டபல்வேறு பிரிவுகளின் கீழ் ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோகவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தன்மீதான வழக்கிற்காக தான் கவலைப்படப் போவதில்லை என்றும், முன்னிலும் வலுவாக குரல் எழுப்புவேன் என்றும் ஆயிஷா சுல்தானா கூறியுள்ளார்.லட்சத்தீவில் பிறந்த ஒரு பாஜக மனிதர், அவர் தனது சொந்த நிலத்தையே விற்க முயலும்போது நான் எனது மண்ணுக்காக போராடுகிறேன்.

தீவுக்கு துரோகம் இழைத்தவர்கள் நாளை தனியாக இருப்பார்கள். பயம் என்பது காட்டிக் கொடுப்பவர்களுக்கு உரியது. எனக்கு அது இல்லை. என் மீதான தேசத்துரோக வழக்கு, உண்மையில் எனக்குக் கிடைத்த வெற்றி என்றும் கூறியுள்ளார்.

;