india

img

லட்சத்தீவை திறந்தவெளி சிறை ஆக்காதே.... இடது ஜனநாயக முன்னணி எம்பிக்கள் தர்ணா...

 கொச்சி:
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை அமல்படுத்துவதன் மூலம் லட்சத்தீவை திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றுவதற்கான ஒன்றிய அரசின் நடவடிக்கையை அனுமதிக்க முடியாது என்கிற முழக்கத்துடன் கொச்சியில் கேரள இடது ஜனநாயக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் மேற்கொண்டனர்.

வெலிங்டன் தீவில் உள்ள லட்சத்தீவு நிர்வாக அலுவலகம் முன்பு வியாழனன்று (ஜுன் 10) எல்டிஎப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட தர்ணாவை முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஏ.விஜயராகவன் தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவுக்கு பயணம் செல்ல அனுமதி மறுப்பது நாட்டின் நாடாளுமன்ற அமைப்பை அவமதிப்பதாகும். அதற்கு எதிராக வலுவானபோராட்டங்கள் நடத்தப்படும் என்று போராட்டம் நடத்திய அவர்கள் தெரிவித்தனர்.நாடாளுமன்ற உறுப்பினர்களான எளமரம் கரீம், பினாய் விஸ்வம், ஏ.எம்.ஆரிப், எம்.வி.ஸ்ரேயாம் குமார், வி.சிவதாசன், ஜான் பிரிட்டாஸ், கே. சோமபிரசாத், தாமஸ் சாழிக்காடன் ஆகியோர் தர்ணாவில் பங்கேற்றனர்.சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.என்.மோகனன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். சிபிஐ மத்திய நிர்வாககுழு உறுப்பினர் பன்னியன் ரவீந்திரன் பேசினார். சிபிஐ மாவட்டச் செயலாளர் பி.ராஜு, சிபிஎம் கொச்சி பகுதி செயலாளர் கே.எம்.ரியாத் ஆகியோர் பேசினர்.

;