india

img

தடுப்பூசி விநியோகக் கொள்கையை மாற்றுக... பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம்...

திருவனந்தபுரம்:
மாநிலங்களுக்குத் தேவையான கோவிட் -19 தடுப்பூசி முற்றிலும் இலவசம் என்பதை உறுதிசெய்வதற்காக மத்திய அரசின்தடுப்பூசி விநியோகக் கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுச் சந்தைக்கு சிறப்பு ஒதுக்கீடு தேவை என்றும், அதற்கான மலிவு விலையை நிர்ணயிக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோவிட் தடுப்பூசியில் ஐம்பது சதவிகிதம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டபடி மத்திய அரசுக்கு சொந்தமானது. மீதமுள்ள 50 சதவிகிதம் மாநிலங்களுக்கும் பொதுச் சந்தைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரப்பாதுகாப்பு என்பது மாநிலங்களின் அரசமைப்புக் கடமையாகும். ஒரு தொற்றுநோய் ஏற்பட்டால் அதைச் சந்திக்க தேவையான ஒதுக்கீட்டை மாநிலங்கள் உறுதிசெய்து இலவசமாக வழங்க வேண்டும். போதியதடுப்பூசியை உறுதி செய்வது மாநிலங்களின் பொது விருப்பமாக உள்ளது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 19 அன்று அறிவிக்கப் பட்ட கொள்கையின்படி, தடுப்பூசிஉற்பத்தியாளர்கள் 50 சதவீதத்தைமத்திய அரசுக்கு கொடுக்கவேண்டும். மீதமுள்ள 50 சதவீதத்தை மாநிலங்களுக்கும் பொதுச் சந்தையிலும் வழங்க உற்பத்தியாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படுகிறது. உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்க மாநிலங்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளன. கோவிட் தொற்றுநோயால் மாநிலங்கள் ஏற்கனவே பெரும் நிதிச் சுமையை எதிர்கொண்டுள்ளன. இன்றைய சூழ்நிலையில், மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட வேண்டும். பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலங்களுக்கு கூடுதல் சுமை மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.கோவிட் பரவுவதைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டஅனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான முடிவு வரவேற்கத் தக்கது. தொற்றுநோயை எதிர்த்துப்போராடுவதற்கான மிகச் சிறந்தவழி, முடிந்தவரை மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதன் மூலம் சமூக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதே பெருந்தொற்றை எதிர்கொள்ளும் வழி என முதல்வர் தெரிவித்துள்ளார்.

கேட்டது 50 லட்சம் கிடைத்தது 5.5லட்சமே
மேலும், தேவையான தடுப்பூசிகிடைக்காததால் கேரளம் எதிர்கொள்ளும் சிரமங்களை முதல்வர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 50 லட்சம் டோஸ் தடுப்பூசியை உடனடியாக வழங்குமாறு கேரளம்  கோரியிருந்தது. ஆனால், 5.5 லட்சம் டோஸ் தடுப்பூசி மட்டுமே பெறப்பட்டது. இதன் காரணமாக, தடுப்பூசிக்கான பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. கேரளம் கோரிய மீதமுள்ள தடுப்பூசி உடனடியாக கிடைக்கச் செய்ய வேண்டும். தடுப்பூசி விஷயத்தில் பொதுச் சந்தை வர்த்தகர்களுடன் போட்டியிட மாநிலங்களை தள்ள வேண்டாம் என்று முதல்வர் கேட்டுக்கொண்டார்.

;