india

img

கேரளத்தில் மீண்டும் இடது ஜனநாயக முன்னணி வெல்லும்....

புதுதில்லி:
கேரளத்தில் இடதுஜனநாயக முன்னணி (எல்டிஎப்) மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. சீ ஓட்டருடன் இணைந்து முன்னணி இந்தி செய்தி சேனலான ஏபிபி இந்த கணக்கெடுப்பை நடத்தியது. அதில் 83 முதல் 91 இடங்களை வென்று எல்டிஎப் ஆட்சி தொடரும் என தெரியவந்துள்ளது .

யுடிஎப் 47 முதல் 55 இடங்களைப் பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பின்படி, 2016 ஆம் ஆண்டை விட அதிக இடங்களை எல்டிஎப் வெல்லும். பாஜக இரண்டு இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றவர்கள் இரண்டு இடங்கள் வரை வெற்றிபெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி தமிழகத்தில் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும். திமுக கூட்டணிக்கு 154 முதல் 162 இடங்கள் கிடைக்கும். அதிமுக-பாஜக கூட்டணி 58 முதல் 66 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

;