india

img

சமத்துவத்துக்கான ‘மகளிர் கேரளம்’ போற்றுதலுக்கு உரிய முயற்சி.... மாதர் சங்க பொதுச்செயலாளர் மரியம் தாவ்லே பாராட்டு

திருவனந்தபுரம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திவரும் ‘மகளிர் கேரளம்’ இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், சமத்துவத்தை உறுதி செய்யும் கேரள முயற்சி போற்றுதலுக்கு உரியது” என்றும் மரியம் தாவ்லே தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்க பொதுச்செயலாளரும் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினருமான மரியம் தாவ்லே கோழிக்கோட்டில் நடந்த ‘மகளிர்கேரளம்’ நிகழ்ச்சியில் பங்கேற்றுமேலும் கூறியதாவது:

“பெண்கள் ஆண்களைப் போலவே சமமானவர்கள்; அவர்களும் மனிதர்கள். அவர்களின் உரிமைக்கான போராட்டமும் மனித உரிமைக்கான போராட் டமே! என்று சமூகத்திற்கு தெரிவிக்கும் முயற்சியை கேரளம் மேற்கொண்டுள்ளது. இது பாராட்டத்தக்கது. நாடு முழுவதும்-குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்கள் கடுமையான வன்முறைக்கு ஆளாகின்றனர். பல சந்தர்ப்பங்களில், குற்றம் சாட்டப்பட்டவர் களைப் பாதுகாத்து அவர்களுக்கு அரசுவேலைகளையும் பாஜக வழங்கிவருகிறது. இவை அனைத்திற் கும் எதிராக கேரளத்தில் மாநிலஅரசு செயல்பட்டு வருகிறது.நாட்டில் ‘கொரோனா’ காரணமாக ஏற்படும் வேலையின்மை ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்கி வருகிறது. கிடங்குகளில் தானியங்கள் இருந்தபோதிலும் மக்கள் பட்டினி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால்கேரளாவில், தகுதியானவர் களுக்கு அரசாங்கம் உணவுப்பைகளையும் பணத்தையும் வழங்கியது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒவ் வொரு உறுப்பினரும் ‘மகளிர் கேரளம்’ பிரச்சாரத்துடன் இருக்கிறார்கள்.இவ்வாறு மரியம் தாவ்லே பாராட்டியுள்ளார்.

;