india

img

கேரள மாற்று உலகிற்கு ஒரு படிப்பினை.... இந்திய போராட்டங்களுக்கு ஊக்கமளிக்கும்.... இஎம்எஸ் நினைவு தின உரையில் சீத்தாராம் யெச்சூரி...

திருச்சூர்:
ஒன்றிய அரசின் பெருநிறுவன-வகுப்புவாத கூட்டணிக்கு எதிரான கேரள மாற்று உலகிற்கு ஒரு படிப்பினை என்று சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். இது நாடு முழுவதும் போராட் டங்களை உற்சாகப்படுத்தும். முதலாளித்துவத்திற்கு மாற்று இருக்கிறது என்பதை கேரளா நிரூபித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

திருச்சூரில் கோஸ்ட் போர்டு ஏற்பாடு செய்த ஈஎம்எஸ் நினைவு ஆன்லைன் கருத்தரங்கை அவர் ஞாயிறன்று தொடங்கி வைத்து பேசியதாவது: 

வீடுகளுக்கு சென்று தடுப்பூசி வழங்கும் கேரள மாதிரியை ஒன்றிய அரசு ஏன் செயல்படுத்தவில்லை என்று மும்பை நீதிமன்றம் மோடியிடம் கேட்டுள்ளது. கல்வி மற்றும்சுகாதாரத் துறையில் கேரள மாதிரி ஐரோப்பிய நாட்டோடு ஒப்பிடத்தக்கது. இது புதிய தாராளமயத் திற்கு எதிரான அரசியல் போராட்டமாகும். கேரளத்தில் இத்தகைய மாதிரி இதற்கு முன்பும் உள்ளது. நில சீர்திருத்த சட்டம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. திட்டமிடல் மற்றும் மேம்பாட்டில் மக்கள் பங்கேற்பை உறுதி செய்கிறது. கூட்டுறவுத் துறையுடன் கைகோர்த்து வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் விவசாயத் துறையைவலுப்படுத்தவும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வரவேற்கத் தக்கவை. உலகமயமாக்கலுக்கு மாற்றாக, கேரளா தனது மக்களுக்குசமூக பாதுகாப்பை உறுதி செய்கிறது. தனியார்மயமாக்கலுக்கு மாற்றாக, பொதுத்துறை வலுப்படுத்தப்படுகிறது.

கார்ப்பரேட் வகுப்புவாத கூட்டணி நாட்டை ஆள்கிறது. ஆர்எஸ்எஸ் ஊக்குவிக்கும் வகுப்புவாதத்தை மோடி செயல்படுத்தி வருகிறார். லட்சத்தீவில் ஒன்றிய அரசின் தலையீடு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. எதிர்ப்புக் குரல்களை ஒன்றியஅரசு அடக்குகிறது. ஆயிஷா சுல்தானா மீதான தேசத் துரோக வழக்கு சமீபத்திய உதாரணம். கோவிட் காலத்தில் கூட, முதலாளிகளின் நலனுக்காக ஒன்றிய அரசு மக்களைக் கொள்ளையடித்தது. ஒவ்வொரு நாளும் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. விவசாய விரோத மசோதா நாடாளுமன்றத்தில் விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. இத்தகைய கொள்கைகளுக்கு எதிராக வெகுமக்களின் எதிர்ப்புக்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார். சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் கே.ராதாகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை தாங்கினார்.

;