india

img

மோடிக்கு எதிராக எழுதுபவர்கள் இலக்கிய நக்சல்கள்... ‘சவ வாஹினி’ கவிதை எழுதிய பாருல் காக்கர் மீது பாய்ந்த குஜராத் சாகித்ய அகாதமி....

 அகமதாபாத்:
கடந்த ஏப்ரல், மே மாதங்களில்கொரோனாவால் மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்தனர். மயானங்களில் எரிக்க இடமில்லாமல் பிணங் கள் கங்கையாற்றில் தூக்கி வீசப் பட்டன. கரை ஒதுங்கிய அவற்றை நாய்கள் கடித்துக் குதறின. காக்கை,கழுகுகள் கொத்தித் தின்றன. கொரோனா தொற்றுப் பரவலைக் கையாளும் விஷயத்தில், பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் செயலற்ற தன்மையைப்பார்த்து உலகமே அதிர்ச்சி அடைந் தது.உள்ளூர் ஊடகங்கள் துவங்கி சர்வதேச ஊடகங்கள் வரையும், எதிர்க்கட்சியினர் மட்டுமன்றி, பாஜகஆதரவு மனநிலை கொண்டவர்கள் அனைத்துத் தரப்பினரும் மோடிஅரசு மீதான தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர். 

‘பிம்பத்தைக் கட்டமைப்பதிலேயே குறியாக இருக்க வேண்டாம்..கொரோனாவை ஒழிக்க வழி பாருங்கள்’ என அனுபம் கெர் என்ற பாஜகஆதரவு பாலிவுட் நடிகர் பகிரங்கமாக பிரதமர் மோடியைச் சாடினார். அதேபோல பாஜக ஆதரவாளராக அறியப்பட்ட குஜராத்தி பெண்கவிஞர் பாருல் காக்கரும், ‘கங்கைஅமரர் ஊர்தியானது’ (சவ-வாஹினிகங்கை) என்ற தலைப்பில் 14 வரிக்கவிதை ஒன்றை எழுதி பிரதமர் மோடியை விமர்சித்தார். ‘கவலைப்பட வேண்டாம், மகிழ்ச்சியாக இருங்கள்; சடலங்கள் ஒரே குரலில் பேசுகின்றன: அரசரே, உங்கள் ராம-ராஜ்யத்தில், கங்கையில் உடல்கள் மிதப்பதைக் காண்கிறோம்! உங்கள் தைரியத்தைக் காட்டுங்கள்; இதனால் அதனால் என்பதெல்லாம் வேண்டாம், வெளியே வந்து உரக்கச் சொல்லுங்கள், ‘நிர்வாண ராஜா பலவீனமானவர் மற்றும் இயலாதவர்’ என்று! நீங்கள் இனி சாந்தகுணமுள்ளவர் அல்ல.. என்பதைக் காட்டுங்கள், தீப்பிழம்புகள் உயர்ந்து வானத்தை அடைகின்றன, நகரெங்கும் தீ பரவுகிறது; அரசரே, உங்கள் ராம-ராஜ்யத்தில், கங்கையில் உடல்கள் மிதப்பதை காண்கிறீர்களா?’ - என்றுநீண்ட பாருல் காக்கரின் இந்தக் கவிதை ஹிந்தி, ஆங்கிலம், வங்காளிஉள்ளிட்ட 6 மொழிகளில் அது மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட நிலையில், அது சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆனது.

இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர், அப்போதே பாருல் காக்கரைமிக மோசமான முறையில் வசைபாடினர். இந்நிலையில், ஒரு மாதத்திற்குப்பிறகு, இந்த ‘சவ வாஹினி- கங்கை’என்ற கவிதைக்காக கவிஞர் பாருல்காக்கரை ‘இலக்கிய நக்சல்’ என்று குறிப்பிட்டு, குஜராத் சாகித்ய அகாடமியின் அதிகாரப்பூர்வ ஏடான ‘சப்தஷ்ருஷ்தி’ தலையங்கம் எழுதியுள்ளது.இந்தக் கவிதை, ‘கிளர்ச்சி நிலையில் வெளிப்படுத்திய அர்த்தமற்ற கோபம்; இந்த வார்த்தைகள் ஒன்றியஅரசுக்கு எதிரான, ஒன்றிய அரசின் தேசியவாத கொள்கைகளுக்கு எதிரான சக்திகளால் பரப்பட்டுள்ளது. இடதுசாரிகள், தாராளவாதிகள் என்று அழைக்கப்படுவர் களாலும், சதித்திட்டங்களை உருவாக்கும் நபர்களாலும், இந்தியாவிற்கான அர்ப்பணிப்பு அற்றவர் களாலும் இந்த கவிதை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் இந்தியாமுழுவதும் விரைவாக குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். அவர்கள் அனைத்து பகுதிகளிலும் சுறுசுறுப்பாக இயங்குவது போலவே இலக்கியத்திலும் தவறான நோக்கங்களுடன் களம் இறங்கியுள்ளனர்’ என்றுகுஜராத் சாகித்ய அகாடமி கொதித் துள்ளது.

பாருல் காக்கரின் பெயரைக் குறிப்பிட்டு இந்த தலையங்கம் எழுதப்படாவிட்டாலும், தலையங்கம் குறிப்பிடும் கவிதை காக்கருடையதுதான் என்று ஒப்புக் கொண்டுள்ளகுஜராத் சாகித்ய அகாடமியின் தலைவர் விஷ்ணு பாண்டியா, ‘பாருல் காகரின் கவிதையில் எந்த சாரமும் இல்லை. கவிதை இவ்வாறு எழுதப்படவும் கூடாது. தங்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒன்றாகவே இதுஇருக்கிறது. இதனை தாராளவாதிகள், மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ்அமைப்புக்கு எதிரானவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்’ என்றும் ரொம்பவே வருத்தப்பட் டுள்ளார்.

;