india

img

சோசலிச தனிச் சிறப்புக்கெல்லாம் இனி இடமில்லை..!எங்கள் அரசு முதலாளிகளை முழுமையாக நம்புகிறது.. வேஷத்தைக் கலைத்தார் நிர்மலா சீதாராமன்...

அகமதாபாத்:
ஏழைகள் பக்கமே மோடி அரசு நிற்கிறது என்று இதுவரை கூறிவந்ததற்கு மாறாக, நாங்கள் முதலாளிகள் பக்கம்தான் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வேஷத்தை முழுமையாகக் கலைத்துள்ளார்.‘நலன்புரி அரசு ஒரு சோசலிச தனிச்சிறப்பு’ என்ற கருத்தை 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட் அடியோடு மறுத்திருப்பதாகவும், இது இந்திய பொருளாதாரத்தில் ஒரு திசை மாற்றம் என்றும் அகமதாபாத்தில் நடைபெற்ற பாஜக அறிவுஜீவிகள்(?) கூட்டத்தில் பேசியுள்ளார்.செல்வத்தை உருவாக்கும் முதலாளிகளை இனியும் நாங்கள் சந்தேகப்பட விரும்பவில்லை; மாறாக, நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க தனியாரை வரவேற்கிறோம் என்றும் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர், மேலும் பேசியிருப்பதாவது:

சோசலிசத்தைப் புகழும் சோவியத் யூனியனில் இருந்து ஒரு அமைப்பை நாம் பெற்றோம். அங்கு சோசலிசத்தின் மகிமைகள் பேசப்பட்டன... சோசலிசத்தால் மட்டுமே முழு மக்களின் நலனையும் கவனித்துக் கொள்ள முடியும் என்று கூறப்பட்டது. ‘நலன்புரி அரசு ஒரு சோசலிச தனிச்சிறப்பு’ என்று அவர்கள் கூறினார்கள். எனவே நாமும், நமது நாட்டு நெறிமுறைகளுக்கு பொருந்தாத சோசலிசத்திற்கு சென்றோம். இதனால், லைசென்ஸ் - இடஒதுக்கீடு ஆட்சியின் மோசமான காலத்தில் வாழ்ந்தோம். தற்போது, பட்ஜெட்வழங்கும் நேரடி மாற்றத்தை குறித்து நாம் பேசுகையில், இதைத்தான் (தொழில்துறைக்கான சோசலிசம் மற்றும் லைசென்ஸ் - இடஒதுக்கீடு ஆட்சி) சொல்கிறோம். ஆனால், ‘நலன்புரி அரசு ஒரு சோசலிச தனிச்சிறப்பு’ என்ற கருத்தை 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட் அடியோடு மறுத்திருக்கிறது; இது இந்திய பொருளாதாரத்தில் ஒரு திசை மாற்றமாகும்.2021-22 நிதியாண்டிற்கான மத்திய அரசின்பட்ஜெட், புதிய தசாப்தத்திற்கான பட்ஜெட். இந்த பட்ஜெட் தெளிவாக கூறுகிறது:

தனியாரான உங்களை நாங்கள் நம்புகிறோம், நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க உங்களை வரவேற்கிறோம். ஒரு அரசாங்கத்தால் என்ன செய்ய முடியும் அல்லது எவ்வளவு தூரம் முடியும் என்பதை நாங்கள் பட்ஜெட்டில் புரிந்து கொண்டிருக்கிறோம். இனிமேல், நாங்கள் உங்களை (செல்வத்தை உருவாக்கும் குடிமக்களாகிய முதலாளிகளை) சந்தேகப்படமாட்டோம். அதாவது நீங்கள் எப்போதும் சிலவற்றுக்கு மேலேதான் இருக்கிறீர்கள். நாங்கள் உங்களை நம்புவதுடன், நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க வரவேற்கிறோம். நீங்களே பணத்தை முதலீடு செய்து, கடினமாக உழைத்து பொருட்களை உற்பத்தி செய்யும்போது, அதில் 3-வது நபர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க வேண்டிய அவசியம் என்ன? அதனால், நாங்கள் வரி அமைப்பையும் மாற்றி விட்டோம். அது நேரடி வரிகளோ அல்லது மறைமுக வரிகளோ எதுவானாலும் சரி. 

ஒருவருடன் நேரடியாக பேசி தவறுகளை காண்பதை விட, அமைப்புகளில் எங்கெல்லாம் ஓட்டைகள் இருக்கின்றன என்பதை வெற்றிகரமாக அடையாளம் காண்பதில் தொழில்நுட்பங்கள் சிறந்து விளங்குகின்றன. அந்தவகையில் தொழில்நுட்ப பயங்கரவாதம்தான் அடுத்து வரப்போகிறது. வரி பயங்கரவாதம் எல்லாம் பழங்கதை ஆகிவிட்டது.இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

;