india

img

சொகுசு விடுதியில் சூதாட்டம்... இளம்பெண்களுடன் மதுவிருந்து... குஜராத் பாஜக எம்எல்ஏ சோலங்கி கைது...

அகமதாபாத்:
குஜராத்தில் சொகுசு விடுதியில் மதுவிருந்து மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக எம்எல்ஏ உள்பட 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.குஜராத் மாநிலம், பஞ்ச் மஹால் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சொகுசுவிடுதி ஒன்றில் சூதாட்டம் மற் றும் மது விருந்து நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து போலீசார் அங்குசென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, இளம் பெண்களுடன் மதுவிருந்து ஒருபுறமும், மற்றொரு புறம்சூதாட்டமும் நடைபெற்றதைபோலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து, அங்கிருந்த 25 பேரை சுற்றி வளைத்தகாவல்துறையினர், அத்தனை பேரையும் மொத்தமாக கைதுசெய்துள்ளனர். விசாரணையின் போதுதான், மதுவிருந்துடன் சூதாட்டில் ஈடுபட்டு கைதானவர்களில் பாஜக எம்எல்ஏ கேசரிசின் சோலங்கியும் ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சோதனையின் போது, ரூ. 6 லட்சம் பணம்,8 கோடி ரூபாய் மதிப்புள்ள8 வாகனங்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.கொரோனா தொற்றுப் பரவல் ஊரடங்கு காரணமாக, சொகுசு விடுதிகள் செயல்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், எம்எல்ஏ ஒருவரே விதிமுறைகளை மீறி மது விருந்து,சூதாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

;