india

img

குஜராத்தில் கொரோனா உயிரிழப்பு 2 மடங்காக அதிகரிப்பு.... 2020-இல் 58 ஆயிரம் பேர்; 2021-இல் 1.23 லட்சம் பேர்....

அகமதாபாத்:
நாடு முழுவதுமே கொரோனா தொற்றுப் பாதிப்பு அதிகரித்துள்ளது என்றாலும், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை அது பாஜக ஆளும் மாநிலங்களில்தான் அதிகம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், பாஜக தலைவர்கள்அதனை ஏற்பதில்லை.

இந்நிலையில்தான், ‘குஜராத்மாடல்’ என்று பாஜகவினரால் பெருமை பீற்றப்பட்ட குஜராத்தில்,உயிரிழப்பு விகிதம் இரண்டு மடங் காகி இருப்பது தெரியவந்துள்ளது.குஜராத் மாநிலத்தில் 2021 மார்ச் 1 முதல் மே 10 வரையிலான 71 நாட்களில் கொரோனாவுக்கு 4 ஆயிரத்து 218 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக அரசு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், இந்த 71 நாட்களில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 871 பேருக்கு, அங்குஇறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள் ளது.மார்ச் மாதத்தில் 26 ஆயிரத்து 026 பேருக்கும், ஏப்ரல் மாதத்தில் 57 ஆயிரத்து 796 பேருக்கும், மே 10 வரை 40 ஆயிரத்து 51 பேருக்கும் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இது எப்படி? என்ற கேள்விக்கு, இறந்தவர்களில் பலர் மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு இணைநோய்கள் காரணமாக இறந் துள்ளதால், அவை கொரோனா மரணமாக கணக்கிடப்படவில்லை; 4218 பேர்மட்டுமே கொரோனாவால் உயிரிழந் துள்ளனர் என்று மாநில புள்ளியியல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.எனினும், குஜராத் பாஜக அரசின்பொய், அதனுடைய புள்ளிவிவரங்கள் மூலமாகவே அம்பலப்பட்டுள் ளது. 2020-ஆம் ஆண்டின் இதே 71 நாட்களில் குஜராத்தில் ஒட்டுமொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 078 பேர் மட்டுமே. 2020 மார்ச்சில் 23 ஆயிரத்து 352 பேரும், ஏப்ரலில் 21 ஆயிரத்து 591 பேரும், மே மாதத்தில் 13 ஆயிரத்து 125 பேரும் உயிரிழந்து இருந்தனர். 

ஆனால், இதுவே 2021 மார்ச் முதல் மே 10 வரையிலான 71 நாட்களில் ஒட்டுமொத்தமாக இறந்தவர் களின் எண்ணிக்கை - 1 லட்சத்து 23 ஆயிரமாக - இருமடங்காக அதிகரித்திருக்கிறது. இயல்பான மரணங்களே என்றாலும் கூட, இறப்பு விகிதம் ஒரே ஆண்டிற்குள் இரண்டு மடங்காகவா அதிகரிக்கும்? என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது.கொரோனா உயிரிழப்பை விடஇணைநோய் காரணமான உயிரிழப்புகள் 30 மடங்கு என்று அதிகரித்து விட்டது என்று குஜராத் அரசு கூறும்புள்ளிவிவரம் நம்பும்படியாக இல்லை. அதற்கேற்பவே எந்தெந்த இணைநோய் காரணமாக எத்தனை பேர் மரணமடைந்தார்கள் என்ற விவரங்களை குஜராத் அரசு தெரிவிக்கவில்லை. எனவே, கொரோனா மரணங்களையே, இயற்கை மரணங்கள் என்று கூறி மாநில பாஜக அரசுமறைப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

;