india

img

பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்திய ‘அமுல்’... போக்குவரத்து செலவு அதிகரிப்பால் இழப்பு...

அகமதாபாத்:
குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத் துதல் கூட்டமைப்பு (GCMMF) ‘அமுல்’ என்ற பிராண்ட் பெயரில் பால் மற்றும் பால்பொருட்களை விற்பனை செய்து வருகிறது. நாட்டிலேயே முன்னணி நிறுவனமாகவும் விளங்கி வருகிறது.

இந்நிலையில், குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பானது, ஜூலை 1 முதல் ‘அமுல்’ பாலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது.இதன் காரணமாக, ‘அமுல் கோல்டு’500 மில்லி லிட்டரின் விலை 29 ரூபாயாகவும், ‘அமுல் தாரா’ அரைலிட்டரின் விலை ரூ. 23 ஆகவும், ‘அமுல் சக்தி’ விலைரூ. 26 ஆகவும் உயர்ந்துள்ளது.கடந்த 19 மாதங்களில் பால் பேக்கேஜ் செய்யும் செலவுகள் 30 முதல் 40 சதவிகிதமும், போக்குவரத்து செலவுகள் 30 சதவிகிதம், எனர்ஜி செலவுகள் 30 சதவிகிதமும் அதிகரித்துள்ளதால், தவிர்க்க முடியாத வகையில், அமுல் பாலின் எம்ஆர்பி (MRP) விலையில் 4 சதவிகிதம் வரையில் விலை அதிகரிக்க வேண்டியதாகி விட்டது என்று நிறுவனத்தின் தலைவர் ஆர்.எஸ். சோதி தெரிவித்துள்ளார்.மேலும் ஒரு ரூபாய் விலையில் 80 காசுகள் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் என்ற குஜராத் கூட்டுறவு பால்சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் (GCMMF) கொள்கைப்படி, இந்த 2 ரூபாய்விலை உயர்விலும் 80 காசுகள் பால் உற் பத்தியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றும் சோதி குறிப்பிட்டுள்ளார்.

;