india

img

கோவிலுக்குள் நுழைந்த தலித் சிறுவன் - கோவிலைச் சுத்தம் செய்ய அபராதம் விதித்த கிராமம் 

பெங்களூரு : கர்நாடகத்தில் கோவிலுக்குள் பிரார்த்தனை செய்யத் தலித் சிறுவன் சென்றதால் ,  அந்த கிராம மக்கள் , அவரின் பெற்றோருக்கு ரூ.35,000 அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கர்நாடகா கொப்பல் மாவட்டத்தில் உள்ள மியாபுரா கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் நுழைய இன்றளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது .மேலும் , அங்கு தலித் சமூகத்தினர் வெளியே நின்று தான் தரிசனம் செய்யவேண்டும் என்ற வழக்கமும் மேற்கொள்ளப்படுகிறது . 

இந்நிலையில் , கடந்த செப்டெம்பர் 4 ஆம் தேதி , பிறந்த நாளை முன்னிட்டு , பிரார்த்தனைக்காக ஹனுமான் கோவிலுக்குச் சென்ற 4 வயதான தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் கோவிலுக்குள் ஓடியுள்ளான்  . இதைக் கண்ட அக்கோவில் அர்ச்சகர் மற்றும் அந்த கிராமத்தின் உயர் சமூகத்தினர் , செப்டம்பர் 11 தேதி அன்று கிராம கூட்டத்தைக் கூட்டி சிறுவனின் பெற்றோருக்கு ரூ.25,000 அபராதமும் , கோவிலைச் சுத்தம் செய்வதற்கு என ரூ.10,000-ம் , என மொத்தம் ரூ.35,000 கேட்டுள்ளனர் . 

இச்சம்பவத்தைச் செப்டம்பர் 21 ஆம் தேதி அறிந்த மாவட்ட நிர்வாகத்தினர் , அந்த கிராமத்திற்கு காவல்துறை மற்றும் வருவாய்த்துறையை அனுப்பி பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர் . இதனையடுத்து ,  5 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரா தெரிவித்துள்ளார் . 

 

;