india

img

ஆக்சிஜன் பற்றாக்குறையால்  ஒரே நாளில் 24 நோயாளிகள் பலி....

பெங்களூரு:
கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனை ஒன்றில் ஒரேநாளில் 24 நோயாளிகள் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 ஆம் அலை அதிதீவிரமடைந்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் கொரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பெருமளவு மக்கள்உயிரிழக்கின்றனர். இதையடுத்து ரயில்கள் மூலமாக பல்வேறுநகரங்களுக்கும் ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.இருப்பினும் நோய் தொற்று அதிகரிப்பு காரணமாக போதியஅளவு ஆக்சிஜன் கிடைக்கவில்லை. இந்நிலையில், கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரே நாளில் 24 நோயாளிகள் பலியாகியுள்ளனர். கர்நாடகமாநிலம் சாமராஜநாகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் இதர காரணங்களுக்காக கொரோனா நோயாளிகள் 12 பேர் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட மருத்துவமனையில் 24 நோயாளிகளின் மரணம் குறித்து விசாரணைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

;