india

img

கர்நாடக அமைச்சர்கள் 2 பேர் பதவி விலகப் போவதாக மிரட்டல்... ஒரே மாதத்திற்குள் ஆட்டம் காணும் பொம்மை அரசு...

பெங்களூரு:
கர்நாடக மாநில புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை கடந்த ஜூலை 28-ஆம் தேதி பதவியேற்றார். எனினும் ஒருவாரத்திற்குப் பிறகே (ஆகஸ்ட் 4) அவரால் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிந்தது. 29 பேர் புதியஅமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால், அப்போது அமைச்சர் பதவிகிடைக்காத பலர் அதிருப்தி அடைந்தனர்.

எடியூரப்பா அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்த லட்சுமண்சவதி, அமைச்சர்களாகப் பணியாற் றிய ஜெகதீஷ் ஷெட்டர், சுரேஷ் குமார், அரவிந்த் லிம்பாவளி, யோகேஷ்வர், ஆர். சங்கர், ஸ்ரீமந்த் பாட்டீல், எடியூரப்பா மகன் விஜயேந்திரா ஆகியோர்மட்டுமன்றி, ராஜூ கவுடா, நேரு ஹோலேகர், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர்அதிருப்தி பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இவர்களின் ஆதரவாளர்கள், பசவராஜ் பொம்மைக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்களிலும் ஈடுபட்டனர். பின்னர் ஒருவழியாக சமாதானமாகினர்.

இதனிடையே, புதிய அமைச்சர் களுக்கு ஆகஸ்ட் 7-ஆம் தேதி துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில்,இதிலும் அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன. தங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள துறைகள் திருப்தி அளிக்கவில்லை என்று ஆனந்த் சிங், பி.ஸ்ரீராமுலு, எம்டிபி நாகராஜ், சுனில்குமார் உள்ளிட்டோர் வெளிப்படையாக குரல் எழுப்பியுள்ளனர்.குறிப்பாக, ஆனந்த் சிங், தீவிரஅரசியலில் இருந்து விலகுவதுடன்,தனது அமைச்சர் பதவி மட்டுமில்லாமல் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமாசெய்ய போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். ராஜினாமா கடிதம் கொடுப்பதற் காக சபாநாயகர் விஷ்வேஷ்வர ஹெக்டே காகேரியிடம் ஆனந்த் சிங் நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் எம்டிபி நாகராஜூம் இதேபோல போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.இந்த சம்பவங்கள், முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளது. மூத்தத் தலைவர் கள் மூலம், அதிருப்தி அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்களை சமாதானம் செய்யும் முயற்சியில் பொம்மை இறங்கியுள்ளார். சிலருடன் அவரே நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டும் பேசி வருகிறார்.

;