india

img

கர்நாடகத்தில் தடுப்பூசியை பதுக்கி விற்ற பாஜக எம்.பி., எம்எல்ஏ... ஒரு டோஸூக்கு ரூ. 900 வீதம் மக்களிடம் கொள்ளை...

பெங்களூரு:
கொரோனா தடுப்பூசிக்கு நாடுமுழுவதும் தட்டுப்பாடு நிலவும் சூழலில், கர்நாடக மாநிலத்தில் பாஜக எம்.பி.யும், எம்எல்ஏ-வும் தடுப்பூசிகளைப் பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்று மாட்டிக் கொண்டுள்ளனர்.

கர்நாடகத்தைச் சேர்ந்த சமூகஆர்வலர் வெங்கடேஷ் தனது மகனுக்கு தடுப்பூசி போடுவதற்காக,பெங்களூரு பசவனகுடியில் உள்ள ஏ.வி. தனியார் மருத்துவமனையை தொலைபேசி மூலம் அணுகியுள்ளார். அப்போது, மருத்துவமனை ஊழியர், ‘ஒரு டோஸ் தடுப்பூசி ரூ. 900’ என்றும்,‘இதற்கு பசவனகுடி எம்எல்ஏ அலுவலகம் அல்லது வாசவி மருத்துவமனையில் பதிவு செய்யவேண்டும்’ என்று தெரிவித்துள் ளார். தடுப்பூசி செலுத்துவதில் எம்எல்ஏ அலுவலகத்திற்கு என்ன வேலை? என்று சந்தேகம்வரவே, சமூக ஆர்வலர் வெங்கடேஷ் மேலும் விசாரித்துள்ளார். அப்போது, ‘பசவனகுடி எம்எல்ஏரவி சுப்ரமணியா அலுவலகத்திலிருந்துதான் இந்த பகுதி மருத்துவமனைகளுக்கு தேவையானதடுப்பூசிகள் சப்ளை ஆகிறது.பணமும் எம்எல்ஏ ரவி சுப்ரமணியா அலுவலகத்திற்குத்தான் போகிறது. நாங்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மட்டுமே கவனித்து வருகிறோம்’ என்று அந்த ஊழியர் தெரிவித்துள்ளார்.இதில் சந்தேகம் வலுவாகவே, சமூக ஆர்வலர் வெங்கடேஷ், விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளார். அப்போதுதான், பெங்களூரு தெற்குத் தொகுதிஎம்.பி.யும், பாஜக இளம்தலைவருமான தேஜஸ்வி சூர்யா மேற்பார்வையில் இந்த தடுப்பூசிசப்ளை நடப்பதுடன், பசவனகுடி எம்எல்ஏவும் தேஜஸ்வி சூர்யாவும் உறவினர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த தகவலை சேகரித்த வெங்கடேஷ், பசவனகுடி எம்எல்ஏ ரவி சுப்ரமணியா மற்றும் எம்.பி. தேஜஸ்வி சூர்யா ஆகியோர் மீது காவல் நிலையத்தில் தற்போது புகார் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சில நாட்களுக்கு முன்புதேஜஸ்வி சூர்யா பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து கட் டண தடுப்பூசி முகாம்களை நடத்தினார். தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டிய அரசின் பிரதிநிதியாக இருந்துகொண்டு, அவரே கட்டண முகாம் நடத்தியது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. இதனால் சுதாரித்துக் கொண்ட தேஜஸ்வி சூர்யா, முகாம் நடத்துவதையே கைவிட்டார். ஆனால், இந்த விவகாரம் ஓய்வதற்குள், தற்போது பசவனகுடி விவகாரத்தில் அவர் மீண்டும் சிக்கியுள் ளார்.

;