india

img

சாணப் புகையுடன் தெருத்தெருவாக பாஜக எம்எல்ஏ ஹோமம்.... மூச்சுத் திணறி அவதிப்பட்ட கொரோனா நோயாளிகள்...

பெலகாவி:
உ.பி. மாநிலம் மீரட் நகரைச்சேர்ந்த கோபால் சர்மா என்ற பாஜக தலைவர், கடந்த வாரம் ‘ஹவன் புகை’ போட்டும் ஹனுமன் மந்திரத்தை உச்சரித்தும் கொரோனாவை விரட்டும் முயற்சி யில் ஈடுபட்டது சர்ச்சை ஆனது.

மாட்டின் சாணம், பசுவின் நெய், மா மரத்தின் பட்டைகள், கற்பூரம் ஆகியவற்றை எரிப்பதன் மூலம் வருவதே ‘ஹவன் புகை’ எனும் நிலையில், மீரட்நகர தெருக்களில் சாம்பிராணி புகையைப் போல, இந்தப் புகையைப் போட்டுக் கொண்டும், சங்குஊதிக் கொண்டும், ஹனுமன் மந்திரத்தை உச்சரித்தவாறு கோபால் சர்மா ஊர்வலம் போனார்.இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெலகாவியிலும் அபய் பாட்டீல் என்ற பாஜக எம்எல்ஏ, சாணப்புகைப் போட்டு, அக்னி ஹோத்ரஹோமம் நடத்தி, கொரோனாவை ‘விரட்ட’ முயன்றது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கர்நாடக அரசு ஜூன் 7 வரை தளர்வுகள் அற்ற ஊரடங்கை அமல்படுத்தியிருக்கும் நிலையிலும், இதற்காக 50 பேரைஅழைத்துக் கொண்டு, சாணப் புகையுடன் அபய் பாட்டீல் ஊர்வலம் சென்றுள்ளார். தள்ளுவண்டியில் சாணம், வேப்பிலை, கற்பூரம் ஆகியவற்றைப் போட்டுபுகையை உருவாக்கி வீதிவீதியாக இழுத்துச் சென்றுள்ளார்.இடையிடையே தெருமுனைகளிலும், வீடுகளின் முன்பாகவும் சாணத்தைக் குவித்து அக்னிஹோத்ர ஹோமம் வளர்த்துள்ளார்.

இதனால், பெலகாவி டவுன்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து,வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் சுவாசிக்க முடியாமல் கடும் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியுள்ளனர். அபய் பாட்டீலின் இந்த செயலுக்கு காங்கிரஸ், இடதுசாரிகள், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள் ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

;