india

img

ஒடிசா சபாநாயகர் மீது செருப்பை வீசிய பாஜக எம்எல்ஏக்கள்... 3 பேர் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்...

புவனேஸ்வர்:
ஒடிசா சட்டப்பேரவையில் சபாநாயகர் மீது செருப்பு மற்றும் மைக்ரோபோன்களை வீசி, பாஜகஎம்எல்ஏக்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

ஒடிசா சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பின்பு, சுரங்கஊழல் பற்றி காங்கிரஸ் கட்சிகொண்டு வந்த ஒத்தி வைப்பு தீர் மானம் மற்றும் உறுப்பினர்களின் விவாதம் ஆகியவற்றுக்கு சபாநாயகர் சூர்ய நாராயண் பேட்ரோஅனுமதி மறுத்து விட்டார். அதேநேரம் ஒடிசா லோக் ஆயுக்தா திருத்தமசோதா எந்த விவாதமும் இன்றிநிறைவேற்றப்பட்டது. இதற்கு அவையில் எதிர்ப்புக் கிளம்பியது.பாஜக எம்எல்ஏக்களின் கூச்சலால் அமளி ஏற்பட்டது.

ஒருகட்டத்தில், சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேஜை மீது ஏறிய பாஜகஎம்எல்ஏக்களான ஜெயநாராயண் மிஸ்ரா, விஷ்ணு பிரசாத் சேத்திமற்றும் மோகன் மஜ்ஜி ஆகியோர்சபாநாயகரை நோக்கி செருப்பு,குப்பைக் கூடை, மைக்ரோபோன் கள் மற்றும் காகிதங்கள் உள்ளிட்ட பொருட்களை வீசி எறிந்து, ரகளையில் ஈடுபட்டனர். இது சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.அவையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையிலான பாஜகஎம்எல்ஏக்களின் இந்த செயலுக்கு காங்கிரஸ், பிஜூ ஜனதாதளம் கட்சி எம்எல்ஏ-க்கள் கண்டனம் தெரிவித்ததுடன், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அதனடிப்படையில், பாஜக எம்எல்ஏக் கள் 3 பேரையும், கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சூர்ய நாராயண் பேட்ரோஉத்தரவிட்டுள்ளார்.

;