india

img

‘தாண்டவ்’ வெப் தொடரை தயாரித்த 5 பேர் மீது உ.பி. அரசு வழக்கு.... இந்துக்கள் மனத்தைப் புண்படுத்தி விட்டதாக பாஜக ஆளும் மாநிலங்களில் கலவரத்தைத் தூண்ட முயற்சி....

லக்னோ:
பழமைவாதத்தை கேள்விக்கு உள்ளாக்கும் இலக்கியப் படைப்புக்கள், திரைப்படங்கள், தொலைக் காட்சித் தொடர்கள் எதுவாக இருந்தாலும் அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்று கூறி கலகத்தில் ஈடுபடுவதுசங்-பரிவாரங்களின் வழக்கமாகி விட்டது.அந்த வகையில், புதிதாக ‘தாண்டவ்’ (Tandav) எனும் இணையதள தொடரைத் தடை செய்ய வேண்டும் என்று கிளம்பியுள்ளனர்.அமேசானின் (amazon prime video) ஓடிடி (OTT) இணையதளம் மூலம், கடந்த ஜனவரி 16 முதல் ‘தாண்டவ்’ எனும் இந்தித் தொடர் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் இந்துக்களின் மனத்தைப் புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக கூறி, படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட 5 பேர் மீது உ.பி. பாஜக அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.

22 நிமிடங்களிலான அதன் முதல்தொடரின் ஒரு காட்சியில் கல்லூரி மாணவராக வரும் நடிகர் முகம்மது ஜிஷான் அயூப், நாடக மேடையில் நவீன உடைகள் அணிந்தபடி இந்துக்களின் கடவுள்களான ராமர் மற்றும் சிவனை அவமதிக்கும் வகையில் நடித்துள்ளார். அவரது வசனங்களும் இந்துக்களைப் புண் படுத்தும் வகையில் இருக்கின்றன” என்று ஷியாம் பாபு சுக்லா என்பவர் காவல்துறையில் புகார் அளித் துள்ளார்.

பாலிவுட்டின் பிரபலங்களான சையப் அலி கான், டிம்பிள் கபாடியாஉள்ளிட்டோர் நடித்த இத்தொடரினால், இரு பிரிவுகள் இடையே மோதல் நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெண்களை இழிவுபடுத்துவதாகவும் உள்ளது என்று புகாரில் கூறியுள்ளார்.\இந்தியப் பிரதமரைப் போலவும் ஒரு கதாபாத்திரம் சில காட்சிகளில் வருகிறது. இது பிரதமர் பதவிக்கும் இழுக்கு ஏற்படும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.பாபு சுக்லாவின் இந்த புகாரின் பேரிலேயே, இணையதள தொடரின் தலைவர் அப்னா புரோஹித், தொடரின் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர், தயாரிப்பாளர் ஹிமான்ஷு கிருஷ்ண மெஹ்ரா, வசனகர்த்தா கவுரவ் சோலங்கி உள்ளிட்ட ஐவர்மீது ஹசாரிபாக் காவல்நிலையத்தில்வழக்குப் பதிவு செய்துள்ளதாக உ.பி. பாஜக அரசு தெரிவித்துள்ளது.

வழக்கை நேரில் சென்று விசாரிக்க ஹசாரிபாக் காவல் நிலையஆய்வாளர் அனில் சிங் தலைமையிலான போலீசார், மும்பைக்கும் விரைந்துள்ளனர்.இதனிடையே, ‘தாண்டவ்’ வெப்சீரிஸ் தொடர்பாக, பாஜக ஆளும்மற்றொரு மாநிலமான மத்தியப்பிரதேசத்திலும் பிரச்சனை கிளப்பப் பட்டு உள்ளது. தலைநகர் போபாலில் ‘தாண்டவ்’ தொடரின் விளம்பரச் சுவரொட்டிகளை, இந்துத்துவா கூட்டத்தினர், பொது இடங்களில் தீயிட்டு எரித்துள்ளனர். ம.பி. மாநிலசுகாதார நலத்துறை அமைச்சர் விஸ்வாஸ் சாரங், மத்திய செய்தித்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு அனுப்பிய கடிதத்தில் ‘தாண்டவ்’ தொடரைத் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

;