india

img

உ.பி. பாஜக அரசால் சித்ரவதை செய்யப்படும் பத்திரிகையாளர்.... விலங்கைப் போல கட்டிப் போட்டு வைத்திருக்கும் கொடுமை..... உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, மனைவி கடிதம்....

மதுரா:
பத்திரிகையாளர் சித்திக் கப் பனை, உத்தரப்பிரதேச பாஜக அரசு சிறையில் அடைத்து சித்ரவதை செய் வதாக அவரது மனைவி ரைஹாந்த் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில், 19 வயது தலித் இளம்பெண்மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொலை செய்யப்பட்டார். கடந்த 2020-ஆம் செப்டம்பர் மாதம்நடந்த இச்சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்துகொண்ட உ.பி. பாஜக அரசு, அந்தப் இளம்பெண்ணின் உடலை பெற்றோருக்குத் தெரியாமலேயே இரவோடு இரவாகஎரித்தது. வல்லுறவே நடக்கவில்லை என்றும் சாதித்தது. ஒருகட்டத்தில் உயர் நீதிமன்றம் தலையிட்ட பிறகே, குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றவர்தான் பத்திரிகையாளர் சித்திக் கப்பன். ஆனால், அவரையும் அவருடன் சேர்ந்த 3 பேரையும் கடந்த 2020 அக்டோபரில் கைது செய்த உ.பி. பாஜக அரசு, இப்போதுவரை சிறையில் அடைத்து சித்ரவதை செய்து வருகிறது. இந்நிலையில்தான், பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் மனைவி, ரைஹாந்த் கப்பன், தனது வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூஸ் மூலம், இந்தியதலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில், ‘தனது கணவர் சித்திக் கப்பன், உ.பி. மாநிலம், மதுரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டிலில் ஒரு மிருகத்தைப் போல சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளார். கடந்த4 நாட்களாக உணவருந்தவோ கழிப்பறைக்குச் செல்லவோ இயலாத நிலையில் உள்ளார். இது ஒரு தீவிரமான பிரச்சனையாகும். உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டுச் சரியான நடவடிக்கை எடுத்து அவரை விடுவிக்கவில்லை என்றால், சித்திக் கப்பனின் அகால மரணத்திற்கே அதுவழிவகுக்கும்’ என்று கூறியுள்ளார்.

சித்திக் கப்பனை விடுதலை செய்யக்கோரி, 2020 அக்டோபர் 6 அன்று தாக்கல் செய்யப்பட்ட ஹேபியஸ் கார்பஸ் மனு, 7 முறைக்குமேல் விசாரணைக்கு பட்டியலிடப் பட்டாலும், ஆறு மாதங்களாக தீர்வுகாணப்படாமல் தொடர்ந்து நிலுவையில்தான் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ரைஹாந்த், தனதுஹேபியஸ் கார்பஸ் மனு, நீதிமன்றத் தில் தள்ளுபடி ஆகும் வரையாவது, சித்திக் கப்பனை இடைக்காலமாக சிறையிலிருந்து விடுவியுங்கள் என்றுவலியுறுத்தியுள்ளார்.‘ஊடகங்கள்தான் ஜனநாயகத்தின் உயிர்மூச்சு. அந்த வகையில்,கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் ஒரு ஊடகவியலாளரை மூச்சு விடச் செய்வதற்கான முயற்சிதான், தனது கடிதம்’ என்றும் ரைஹாந்த் குறிப்பிட்டுள்ளார்.

;