india

img

உ.பி. அமைச்சர்களின் குழந்தைகளை முதலில் கணக்கெடுக்க வேண்டும்... காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் அதிரடி...

புதுதில்லி:
உத்தரப் பிரதேசத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு வேலை இல்லை; ரேசனில் பொருட்கள் கிடையாது என்று அறிவித்துள்ள அம்மாநில பாஜக அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.“உ.பி. பாஜக அரசானது, தான் கொண்டுவந்துள்ள சட்டத்தை முதலில் தன்னிடம் இருந்து அமல்படுத்த வேண்டும். அதாவது, அமைச்சர்களுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளன. முறைப்படியாக பிறந்த குழந்தைகள், முறையற்ற முறையில் பிறந்த குழந்தைகளை கணக்கெடுக்க வேண்டும்.

அதில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள அமைச்சர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகே மற்றவர்களுக்கு இதனை அமல்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் பார்க்-கும் உ.பி அரசின் வரைவு மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா-2021க்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.“யோகி ஆதித்யநாத், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரைப் பொறுத்தவரை அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இப்போது, முழு இந்தியாவையும் இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்காவிட்டால், நாம் வேறொரு நாட்டை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், எங்கிருந்து மனிதவளம் கிடைக்கும்?” என்று ஷபிகுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

;