india

img

குல்தீப் சிங் செங்காரின் மனைவிக்கு உள்ளாட்சியில் ‘சீட்’.... பாலியல் குற்றவாளியின் குடும்பத்தை கைவிடாத பாஜக....

லக்னோ:
உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ-வாகஇருந்தவர் குல்தீப் சிங் செங்கார். 55 வயதான இவர், கடந்த 2017-ஆம்ஆண்டு, 17 வயதுச் சிறுமியை, தனதுசகோதரர் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கினார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைசுரேந்திரா சிங் (50), தனது மகளுக்குநீதிகேட்டுப் போராடிய நிலையில், அவரை மரத்தில் கட்டிவைத்து கொடூரமாகத் தாக்கினார். இதில் சுரேந்திரா சிங் இறந்தே போனார். அத்துடன் நிற்காமல் தன்மீதான வழக்கை திரும்பப்பெறச் சொல்லி,சிறுமியின் குடும்பத்தை மிரட்டிவந்த குல்தீப் சிங் செங்கார், சிறுமியின் தங்கைக்கும் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த 2019 ஆகஸ்டில், சிறுமிசென்று கொண்டிருந்த கார் மீதுலாரி மோதியது. இதில், பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரது வழக்கறிஞரும் படுகாயத்துடன் தப்பிய நிலையில், சிறுமியின் உறவினர்கள் 2 பேர்உயிரிழந்தனர். இந்த விபத்தின் பின்னணியிலும் செங்கார் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.இதையடுத்து, பிரிவு 376 (கற்பழிப்பு), 366 (கடத்தல், கடத்திச் சென்றுதிருமணம் செய்ய தூண்டுதல்), மற்றும் 506 (கிரிமினல் அச்சுறுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு போடப்பட்டு, குற்றமும் உறுதிசெய்யப்பட்ட நிலையில்,குல்தீப் சிங் செங்காரின் எம்எல்ஏ பதவி பறிபோனது. தற்போது செங்கார் சிறையில் இருக்கிறார்.எனினும், எம்எல்ஏ பதவியை இழந்த குல்தீப் சிங் செங்காரின் குடும்பத்தை மறக்காத பாஜக தலைமை, செங்காரின் மனைவி சங்கீதா செங்காருக்கு, உன்னாவ் மாவட்ட ஊராட்சித் தேர்தலில், பதேபூர் சவுராசி திரிதயா வார்டில்போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.

;