india

img

மதரசாக்களில் இராமாயணம் மகாபாரத பாடங்கள் கட்டாயம்...? பாஜக அரசு அடாவடி; மவுலானாக்கள் எதிர்ப்பு.....

லக்னோ:
இஸ்லாமிய கல்வி நிறுவனங் களான மதரசாக்களில் இராமாயணம், மகாபாரதம் என்று இந்து மதத்தைச் சேர்ந்த புராணங்கள் படிப்பதைக் கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது.மத்திய கல்வித் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக திறந்தவெளிக் கல்வி நிறுவனம் (National Institute of Open Schooling-NIOS) செயல்படுகிறது. இதன்கீழ் நாடு முழுவதிலும் செயல்படும் ஒரு பகுதி குருகுலங்களும், இஸ்லாமியர்களின் 100 மதரசாக்களும் இடம்பெற்றுள்ளன. இந்த மதரசாக்களில் சுமார் 50 ஆயிரம் முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின்படி பண்டைக்கால வரலாறாக ஐந்து வகைப் பாடப்பிரிவுகளை ‘என்ஐஓஎஸ்’ அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், வேதங்கள், விஜானா, யோகா, சமஸ்கிருதம், தொழிற்கல்வி ஆகியவை உள்ளன. வேதங்கள் பிரிவில் இராமாயணம், மகாபாரதப்பாடங்கள் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் இவற்றை படித்தாகவேண்டிய கட்டாயமும் இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், தனியார் மதரசாக்களில் தலையிடும் உரிமை அரசுக்கு இல்லை என்று லக்னோ ஈத்கா மசூதியின் இமாமும் தாரூல் உலூம் பிரங்கி மஹாலின் தலைவருமான மவுலானா காலீத் ரஷீத் கூறியுள்ளார்.“தனியாராலும் உ.பி. அரசின் நிதி உதவியாலும் இரண்டு வகைமதரசாக்கள் உள்ளன. இதில் தன்னிடம் அங்கீகாரம் பெற்ற மதரசாக்களின் பாடத்திட்டங்களை வகுக்கும் உரிமை என்ஐஓஎஸ்-க்கு இல்லை. தனியார் மதரசாக்களில் தலையிடும் உரிமையும் அதற்கு கிடையாது என்பதால் அதன் புதிய பாடத்திட்டங்களை மதரசாக்கள் ஏற்கக் கூடாது” என ரஷீத் குறிப்பிட்டுள்ளார்.லக்னோவின் மற்றொரு முக்கிய மவுலானாவான யாகூப் அப்பாஸ், “மதரசாக்களில் ராமாயணம், மகாபாரதப் பாடங்களைஅறிமுகப்படுத்தும் அரசு, குருகுலங்களில் புனித குர்ஆனை போதிக்க உத்தரவிடுமா?” என்று கேட்டுள்ளார்.

;