india

img

பக்கீர் ராம் கோயிலை விலைக்கு வாங்கிய ராமர் கோயில் அறக்கட்டளை.... அயோத்தி மாவட்ட சிவில் நீதிமன்றம் நோட்டீஸ்....

அயோத்தி:
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்காக ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையை ஒன்றிய அரசு அமைத்துள்ளது.அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், ராமர் கோயில் பெயரில் அயோத்தியின் பல இடங்களிலும் நிலங்களை வாங்கிக் குவித்து வருகிறார். இதில் பலநூறுகோடி ரூபாய் அளவிற்கு அடுக்கடுக்கான ஊழல் புகார் கள் எழுந்து வருகின்றன. 

அந்த வகையில், அயோத்தியில் பக்கீர் ராம் கோயிலை அதன் மடத்துடன் சேர்த்து விலைக்கு வாங்கிய விவகாரமும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அயோத்தி ராமர் கோயிலுக்கு எதிரில் உள்ள ராம் கோட் பகுதியில் பக்கீர்ராம் எனும் பெயரில் மடத்துடன் அமைந்தஒரு கோயில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோயிலை சமீபத்தில் ராமஜென்ம பூமி அறக்கட்டளை விலைக்குவாங்கியது. பதிலுக்கு பக்கீர் ராம்கோயில் மற்றும் மடத்துக்கு அயோத்தியில் மாற்று இடம் வழங்கியது.ஆனால் இந்த ஒப்பந்தம் செல்லாதுஎனவும், இது பக்கீர் ராம் கோயில் அறக்கட்டளை விதிகளுக்கு புறம்பானது என ராமஜென்ம பூமி அறக்கட்டளை மீது அயோத்தியை சேர்ந்த சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த், சிவசேனா மாநிலத் தலைவர் சந்தோஷ் துபே ஆகியோர் தொடர்ந்தனர்.

“பக்கீர் ராம் மடத்தின் தலைவராக இருந்த மஹந்த் ராஜ்கிஷோர் சரண் அவர்கள் வகுத்த அறக்கட்டளை விதிகளின்படி பக்கீர் ராம் கோயிலையும் அதன் மடத்தையும் விற்க முடியாது.இக்கோயிலில் ஆரத்தி மற்றும் பூஜைகள் அதே இடத்தில் தடைபடாமல் நடைபெற வேண்டும் எனவும் விதி உள்ளது. ஆனால், மஹந்த் ராஜ்கிஷோர் சரண் சமீபத்தில் இறந்த பிறகு, கிருபாசங்கர் தாஸ், ராம் கிஷோர் சிங் என்றஇருவர் தங்களைத் தாங்களே அறக் கட்டளையின் புதிய நிர்வாகிகளாக அறிவித்துக் கொண்டதுடன், தங்களின் பெயர் மார்ச் 26-இல் உ.பி. அரசு பதிவேட்டில் பதிவான மறுநாளே மடத்தையும் கோயிலையும் ஒருசேர ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு விற்றுள்ளனர். எனவே இது செல்லாது” என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட அயோத்தி மாவட்ட சிவில் நீதிமன்றம், ராம ஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக் கட்டளைக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

;