india

img

பசுக்களை கொரோனாவிலிருந்து காக்க பல்ஸ் - ஆக்ஸிமீட்டர் சோதனை.... மக்களை மறந்த உ.பி. பாஜக முதல்வர் ஆதித்யநாத்....

லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனாநோயாளிகள் கொத்துக் கொத் தாக செத்து மடிகின்றனர். இறந்தவர்களை எரிப்பதற்கு மயான வசதியில்லாமல், பிணங்கள் நாட்கணக்கில் வரிசையில் காத்திருக்கின்றனர். நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்கு ஆம்புலன்சுகள் இல்லை. சிகிச்சை அளிப்பதற்கு படுக்கை வசதிகள் இல்லை.

அலகாபாத் உயர் நீதிமன்றமே அண்மையில் இப்பிரச்சனைகளைக் குறிப்பிட்டு, உத்தரப்பிரதேச அரசை கடுமையாக சாடியது. கொரோனா நோயாளிகளை சாக விடுவதும் ஒரு இனப்படுகொலையே என்று குறிப் பிட்டது.ஆனால், அதைப்பற்றியெல் லாம் கவலைப்படாத உ.பி. பாஜக அரசு வழக்கம் போல பசுமாடுகள் மீது அக்கறை காட்டத் துவங்கியுள்ளது.கொரோனா தொற்றிலிருந்து பசுமாடுகளைப் பாதுகாப்பதற்காக, உ.பி.யிலுள்ள 75 மாவட்டங்களிலும் பசுக்கள்உதவி முகாம்கள் அமைக்க சாமியார் முதல்வரான ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த முகாம்களில் வெப்பநிலை பரிசோதிக்கும் வசதிகளை ஏற்படுத்தவும், ஆக்சிஜன் பரிசோதிக்கும் ஆக்ஸிமீட்டர்களை (Pulse - Oximeter) பயன்படுத்தி மாடுகளைத் தினமும் பரிசோதிக்கவும் அவர் ஆணையிட்டுள்ளார். உத்தரப் பிரதேசம் முழுவதும் தற்போது 5 ஆயிரத்து 268 பசு பாதுகாப்பு மையங்களில்5 லட்சத்திற்கும் மேற்பட்ட பசுக் கள் பராமரிக்கப்படுவதாகவும் உ.பி. அரசு தெரிவித்துள்ளது.

;