india

img

காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நிலத்தை பரிசளித்த முஸ்லிம்கள்.. நுழைவுவாயிலுக்காக 1700 சதுர அடியை விட்டுக் கொடுத்தனர்....

லக்னோ:
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில்உள்ளது. இதன் கர்ப்பக்கிரக பகுதிக்கு முன்புறமாக ஒட்டியபடி முஸ்லிம்களின் கியான்வாபி மசூதி உள்ளது.

இதனை வைத்து, காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டுத்தான், முகலாய மன்னர் அவுரங்கசீப் கியான்வாபி மசூதியைக் கட்டினார் என்றும், எனவே, அதனைஇடிக்க வேண்டும் என்று விஜய் சங்கர்ரஸ்தோகி என்பவர் வாரணாசி சிவில்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். வாரணாசி மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி அசுதோஷ் திவாரியும், கடந்த ஏப்ரல் 9 அன்று மனுவைவிசாரித்து, தொல்லியல் விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்தார்.ஆனால், “நீதிபதி அசுதோஷ் திவாரியின் உத்தரவு ஒன்றிய அரசால்1991-இல் பிறப்பிக்கப்பட்ட மதச் சின்னங்களை பாதுகாக்கும் சிறப்பு சட்டத்தை மீறுகிறது” என்று அந்த உத்தரவுக்கு உ.பி. சன்னி முஸ்லிம் மத்திய வக்பு வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இதனிடையே, கியான்வாபி மசூதியின் முன்புறப் பகுதியிலுள்ள 1,700 சதுர அடி அளவுள்ள நிலத்தைகாசி விஸ்வநாதர் கோயிலுக்கு முஸ் லிம்கள் பரிசாக அளித்துள்ளனர்.

காசி விஸ்வநாதர் கோயில் நடைபாதைத் திட்டத்திற்கு இது தேவைப்படுவதால், அறக்கட்டளை நிர்வாகிகள் இந்த நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு எங்களிடம் கேட்டார்கள். நிலம் வணிக ரீதியானது மற்றும்மிகவும் மதிப்புமிக்கது. இதுதொடர்பான வக்புவாரிய விதிகளை சரிபார்த்து வந்தோம். அதைத்தொடர்ந்து ஜூலை 8-ஆம் தேதி மசூதி நிலத்தைகோயிலுக்காக பரிமாறிக் கொள்ளமுடிவு செய்தோம் என்று கியான்வாபி மசூதியின் பராமரிப்பாளர் எஸ்.எம். யாசின் தெரிவித்துள்ளார். பதிவுக் கட்டணமும் ரூ.2 லட்சத்து 29 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது.வக்புவாரியச் சொத்தை விலைக்கு வாங்க முடியாது என்பதால், பதிலுக்கு 1000 சதுர அடி நிலத்தை கோயில் நிர்வாகம் மசூதிக்கு வழங்கியுள்ளது. இந்த இரு நிலங்களுமே சமமான மதிப்பு உடையவை என்று கோயில் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் வர்மா தெரிவித்துள்ளார்.

;