india

img

கழுதை சாணத்தில் மசாலா தயாரித்த இந்து அமைப்பு தலைவர் கைது.... ஆதித்யநாத்தின் ஹிந்து யுவ வாஹினியைச் சேர்ந்தவர்....

ஹத்ராஸ்:
மசாலா பொருட்கள் தயாரிப்பில் கழுதை சாணம், மரத்தூள், ஆபத்தானகெமிக்கல் பயன்படுத்தி வந்த தொழிற்சாலை, பாஜக ஆளும் உத்தரப்பிர தேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த தொழிற்சாலையை நடத்தி வந்ததே, முதல்வர் ஆதித்யநாத்தால் 2002-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட- ‘ஹிந்து யுவ வாஹினி’ என்றஇந்துத்துவா அமைப்பின் தலைவர் தான் என்பதும் தெரியவந்துள்ளது.ரெடிமேட் மசாலா பொருட்களே, நாடு முழுவதும் சந்தையை அதிகளவில் ஆக்கிரமித்துக் கொண்டிருக் கின்றன. மிளகாய்த் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா என அனைத்து மசாலாக்களும் அரைத்து ரெடிமேடாக பாக்கெட்டில் வந்து விடுவதால், மக்களும் இதனையே அதிகளவில் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்தான், உத்தரப்பிர தேசத்தின் ஹத்ராஸ் நகரில் உள்ள நவிப்பூர் பகுதி மசாலா தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில், பிரபலமான நிறுவனங்களின் பெயரில் போலி மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா ஆகியவற்றைத் தயாரித்து வந்ததும், இந்த மசாலா பொருட்கள் தயாரிப்புக்கு கழுதைச் சாணம், மரத்தூள், ஆபத்தான அமிலங்கள் (dangerous acids) ஆகியவற்றைப் பயன்படுத்தியதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பல்வேறு பிராண்டுகளின் பெயரில், கலப்படம் செய்யப்பட்டிருந்த சுமார் 300 கிலோ போலி மசாலா பொருட்கள், 1000 வெற்றுப் பாக்கெட்டுக்கள், 100 மசாலா பாக்கெட்டுக்கள் ஆகியவற்றைக் கைப்பற்றிய அதிகாரிகள், தொழிற்சாலையின் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.அந்த விசாரணையில்தான், போலி மசாலா பொருள் தயாரிப்பு தொழிற்சாலையை, சட்டவிரோதமாக நடத்தி வந்தவர் அனூப் வர்ஷனேய் என்றும், இவர், தற்போதைய பாஜக முதல்வர் ஆதித்யநாத், 2002-ஆம் ஆண்டு துவங்கிய ‘ஹிந்து யுவ வாஹினி’யின் பிரதேச தலைவர் என்பதும் தெரியவந்துள்ளது.இதையொட்டி அனூப் கைதுசெய்யப்பட்டு அவர் மீது தற்போது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தொழிற்சாலை மூடி சீல் வைக்கப் பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்பட்ட மசாலாக்களை சோதனைக்கு அனுப்பியதில், அவற்றை தொடர்ந்து பயன்படுத்து வோருக்கு உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று கண்டறியப் பட்டுள்ளது.

;