india

img

கேரள கன்னியாஸ்திரிகளைத் துன்புறுத்திய பஜ்ரங் தள் கும்பல்... பினராயி விஜயன் கண்டனம்; அமித்ஷாவுக்கு கடிதம்....

லக்னோ:
ரயிலில் பயணம் செய்தகேரள கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் 2 பேரை, பஜ்ரங்தள் குண்டர்கள் துன்புறுத்தி, தாக்க முயன்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.தில்லியில் நடைபெற்ற கிறிஸ்தவ மத மாநாட்டுக்கு வந்திருந்தஒடிசாவைச் சேர்ந்த 2 பெண்கள், மாநாட்டை முடித்துக் கொண்டுமீண்டும் ஊருக்கு ரயிலில் புறப் பட்டுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பாக கேரளத்தைச் சேர்ந்த 2 கன்னியாஸ்திரிகளும் உடன் சென்றுள்ளனர். நான்கு பேரும் ஹரித்துவார் - பூரி உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூர்கேலாநோக்கி பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி-க்கு ரயில்சென்றபோது, பஜ்ரங்தள் அமைப் பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் ஒரு கும்பல், கன்னியாஸ்திரிகளைத் துன்புறுத்தி, தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் அவர்களை மிரட்டிபாதி வழியிலேயே ரயிலிலிருந்து இறக்கி விட்டுள்ளனர்.இதனால், மிகுந்த அச்சத்திற்கும் தவிப்புக்கும் ஆளான கன்னியாஸ்திரிகள், தங்களின் வெள்ளைநிற மதச் சீருடையிலேயே தொடர்ந்து பயணிக்க முடியாமல், அதனைக் களைந்து, சாதாரண உடையை அணிந்துகொண்டு, குண்டர்களிடமிருந்து தப்பியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு தற்போது நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. கன்னியாஸ்திரிகள் அவமானப்படுத் தப்பட்டது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.கேரள முதல்வர் பினராயி விஜயன், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். “ரயிலில் இருந்து கன்னியாஸ்திரிகளைப் பாதியிலேயே இறக்கி விட்ட சம்பவத்துக்கும், அவர்களை அவமானப்படுத்தியதற்கும் கண்டனம் தெரிவிக்கிறேன்” என்று கடிதத்தில் கூறியுள்ள பினராயி விஜயன், “சம்பந்தப்பட்ட பஜ்ரங் தள்நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “இந்தச் சம்பவம்சர்வதேச அளவில் தேசத்தின்நன்மதிப்பையும், நமது பாரம்பரியமான மத சகிப்புத்தன்மை, வழிபாடு ஆகியவற்றின் மதிப்பையும் கெடுத்து விடும். இதற்கு உச்சபட்ச கண்டனத்தைத் தெரிவித்து மத்திய அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும்” என்று கூறியுள்ள பினராயி விஜயன், “ஒருமதத்தின் மீது நம்பிக்கையில்லாத வர்களுக்கும், நம் பிக்கை உள்ளவர்களுக்கும் அரசியலமைப்புச் சட்டம் சமமானஉரிமைகளையே வழங்கியுள் ளது” என்று பத்தனம் திட்டா பிரச்சாரக் கூட்டத்திலும் இப் பிரச்சனையை எழுப்பிப் பேசியுள்ளார்.

;