india

img

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவமனை வார்டு உதவியாளர் உயிரிழப்பு.....

மொராதாபாத்:
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் வார்டு உதவியாளராகப் பணியாற்றி வந்த  மஹிபால் சிங்(46) உயிரிழந்தார். அவர் உயிரிழப்ப தற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாகத்தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 16-ஆம் தேதி முதல் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை தடுப்பூசி போட்டுக்கொண்ட மஹிபால்சிங் ஞாயிறன்று உயிரிழந்தார். 

இதுகுறித்து மொராதாபாத் மாவட்ட தலைமை மருத்துவர் எம்.சி. கார்க் கூறுகையில், “மஹிந்தாபால் சிங் சனிக்கிழமை எந்தவித பிரச்சனையும் இன்றி தனது பணிகளைக் கவனித்துள்ளார். ஞாயிறு அன்று  மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து நெஞ்சுவலிப்பதாகவும் கூறிய அவர் திடீரென இறந்துள்ளார். மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை” என்றார்.

மஹிபால் சிங் மகன் விஷால்கூறுகையில், “ எனது தந்தை சனிக்கிழமை பகல் 1.30 மணியளவில் தடுப்பூசி செலுத்திக்கொண் டார், அவரை நான் வீட்டிற்கு அழைத்து வந்தேன். அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது,  இருமல், நிமோனியா பாதிப்பு லேசாக இருந்தது.   வீட்டிற்கு வந்த அவர் தனக்கு உடல்நிலை பாதிப்பு கடுமையாக இருப்பதாகக் கூறினார்” என்றார்.

மஹிபால் சிங்கின் உடல் உடற்கூராய்வுசெய்யப்பட்டதில் அவர் (Cardio-Pulmonary)  கார்டியோ-நுரையீரல் நோய் காரணமாகவே  அதாவது கார்டியோ ஜெனிக் அதிர்ச்சி/செப்டிசெமிக் அதிர்ச்சி) நோயால் பாதிக்கப்பட்டிருந்ததே உயிரிழப்புக்குக் காரணம் என்பது தெரிய வந்துள்ளதாக என்டிடிவி-யை மேற்கோள் கோட்டி நேஷனல் ஹெரால்டு இணைய தளம் தெரிவித்துள்ளது.

;