india

img

உத்தரபிரதேசத்தில்   பசுக்களை பாதுகாக்க உதவி மையமாம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் பசுக்களை பாதுகாக்க பசு உதவி மையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2 வது அலையில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதுகுறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது தாத்தாவுக்கு ஆக்ஸிஜன் தேவை என பதிவிட்ட இளைஞர் மீது அம்மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் ஆக்ஸிஜன்  இல்லாமல் மக்கள் உயிரிழப்பது இனப்படுகொலைக்கு சமம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. ஆனால் இது குறித்தெல்லாம் கவலைப்படாத யோகி அரசு பசுக்களை பாதுகாக்க  ஒவ்வொரு மாவட்டத்திலும் பசு உதவி மையம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் கோசாலைகள் அனைத்திலும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் கட்டாயமாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 

;