india

img

சீரம் நிறுவனத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்..... தடுப்பூசி விலை உயர்வுக்கு பாஜக எம்எல்ஏ எதிர்ப்பு....

கோரக்பூர்:
இந்தியாவில் சீரம் நிறுவனத் தின் சார்பில் ‘கோவிஷீல்ட்’ என்றதடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் சார்பில் ‘கோவாக்சின்’ என்ற தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை, இந்தியாவின் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல் மோடி அரசுவெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததால், தற்போது இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்குதட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தத்தமது மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசியை மோடி அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றுமாநில முதல்வர்கள் போர்க்கொடிஉயர்த்தினர். மோடி அரசோ, மாநிலங்களே நேரடியாக தடுப்பூசிகளை வாங்கிக் கொள்ளுமாறு கூறி,தனது பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டது. வேறு வழியில்லாத தால், அதற்கும் சில மாநிலங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.

ஆனால், கோவிஷீல்ட் தடுப்பூசியைத் தயாரிக்கும் சீரம் நிறுவனமானது, தனது தடுப்பூசியின் விலையை 150 ரூபாயிலிருந்து திடீரென 400 ரூபாயாக உயர்த்தியது. இதுவே தனியார் மருத்துவமனைகளுக்கு என்றால், ரூ. 600என்று அறிவித்தது. இது நாட்டில்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடி அரசோ, இந்த விலை உயர்வு குறித்து இப்போதுவரை தலையிடவில்லை.இந்நிலையில், கொரோனா தடுப்பூசி விலையைத் தன்னிச்சையாக உயர்த்திய, சீரம் நிறுவனத்தை, தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ் அரசு கையகப்படுத்த வேண்டும் என்று உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ-வான டாக்டர் ராதாமோகன் தாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார். சீரம் நிறுவனத்தின் முதலாளி ஆதார் பூனாவல்லாவை ஒரு கொள்ளைக்காரர் (dacoit) என்றும் பாஜக எம்எல்ஏ சாடியுள்ளார்.

;