india

img

போலிப் பல்கலைக்கழகங்கள் உ.பி.யில் அதிகம்... யுஜிசி தகவல்...

புதுதில்லி:
நாடு முழுவதும் 24 போலிப் பல்கலைக்கழ கங்கள் உள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு ( யுஜிசி) தெரிவித்துள்ளது.  இதுகுறிது எழுத்து மூலம் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு மக்களவையில் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்துள்ள பதில் வருமாறு :

மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் மற்றும் மின்னணு, அச்சு ஊடகங்களில் வந்த புகார்களின்படி நாடு முழுவதும் 24 போலிப் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதை யுஜிசி கண்டறிந்துள்ளது. யுஜிசியின் அனுமதி பெறா மல் இயங்கிவரும் மேலும் இரண்டு பல்கலைக்கழகங்கள் தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. அவை அனைத்தும் யுஜிசி விதிகளுக்கு முரணாகச் செயல்படுகின்றன. அவற்றுக்கு மாணவர்களுக்குப் பட்டம் அளிக்கும் அதிகாரம் இல்லை.போலிப் பல்கலைக்கழகங்களில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 8, தில்லியில் 7, ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் தலா 2, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களில் தலா ஒரு போலிப் பல்கலைக்கழகம் உள்ளது. ஸ்ரீ போதி உயர் கல்வி அகாடமி என்னும் போலிப்பல்கலை க்கழகம் புதுச்சேரியில் செயல்படுகிறது.கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒரு போலிப் பல்கலைக்கழகம் உள்ளது. அவை - ஸ்ரீ போதி உயர் கல்வி அகாடமி புதுச்சேரி; கிறிஸ்து புதிய ஏற்பாடு நிகர்நிலைப் பல்கலைக்கழகம், ஆந்திரப் பிரதேசம்; ராஜா அரபு பல்கலைக்கழகம், நாக்பூர்; செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழ கம், கேரளா மற்றும் படகன்வி சர்க்கார் உலக திறந்தநிலைப் பல்கலைக்கழக கல்விச் சங்கம், கர்நாடகா ஆகியவை ஆகும்.இவை குறித்து தேசிய அளவிலான ஆங்கில மற்றும் இந்தி நாளிதழ்களில், யுஜிசி சார்பில் எச்சரிக்கை விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. போலிப் பல்கலைக்கழகங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.

;