india

img

ஆற்றில் மிதக்கும் பிணங்கள்... 24 மணிநேரமும் எரியும் சுடுகாடுகள்..... வாரணாசி தொகுதி மக்களை கைவிட்ட பிரதமர் மோடி....

வாரணாசி:
பீகார் மாநிலத்தில் ஓடும் கங்கை ஆற்றில்,வெள்ளைத் துணிகளில் சுற்றப்பட்ட 40-க்கும்மேற்பட்ட உடல்கள் மிதந்தது கடந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சில இடங்களில் அந்த உடல்களை நாய்கள் கடித்துக் குதறியதும், பறவைகள் கொத்தித் தின்றதும் ஊடகங்களில் வெளியான போது, பலரும் உறைந்து போயினர்.இந்நிலையில்தான், உ.பி. மாநிலத்தில்,பிரதமர் நரேந்திர மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசியிலுள்ள கங்கை ஆற்றிலும் பாதி எரியூட்டப்பட்ட சடலங்கள் மிதப்பதாகவும், எரிப்பதற்கு நேரமில்லாத அளவிற்கு கொரோனா மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வாரணாசி ராம்நகர் பகுதியில் 7 உடல்கள் பாதி எரியூட்டப்பட்ட நிலையில் மிதந்ததை‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டின் செய்திகள்இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிச்சத்திற்கு கொண்டுவந்தன. ராம்நகர் காவல் நிலைய அலுவலர் வேத் ப்ரகாஷ் ராய்-யும் ‘மொத் தம் 7 உடல்கள் இருந்தன. அவை, பாதிஅழுகிய நிலையில் சப்ஜாத் என்ற கிராமத்தின்அருகில் கண்டறியப்பட்டன’ என்று உறுதிப் படுத்தினார்.சப்ஜாத் கிராமத்துக்கு அடுத்து இருக்கும்டோம்ரி கிராமம், பிரதமர் மோடி கடந்த2018-ஆம் ஆண்டு நேரடியாக தத்தெடுத்துக்கொண்ட கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரணாசியில், ஏப்ரல் 1 முதல் மே 7 வரை,அதிகாரப்பூர்வமாக மட்டுமே 227 கொரோனா மரணங்கள் பதிவாகி இருக்கின்றன. ஆனால், மாவட்ட கண்காணிப்பு அதிகாரியோ, கடந்த ஒரு வருடத்திலேயே வாரணாசிமாவட்டத்தில் 650 பேர்தான் இறந்துள்ளதாக கூறியுள்ளார். இதேபோல வாரணாசியின் மணிகர் னிகா கட் பகுதியில், கடந்த ஏப்ரல் 15-க்கும்ஏப்ரல் 23-க்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும்சுமார் 1,500 உடல்கள் இறுதிச் சடங்கிற்குவந்தது என்பது சமூக செயற்பாட்டாளர்களின் கருத்தாக உள்ளது. வாரணாசியில் மொத்தம்13 மயானங்கள் இருக்கும் நிலையில், ஏப்ரல் 1முதல் மே 7-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் கொரோனா மரணங்களின் எண் ணிக்கை 1,680-க்கு குறைவாக இருக்காது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.வாரணாசியை பூர்வீகமாக கொண்ட தகன சடங்குகள் செய்யும் ஒருவரும், ’பர்ஸ்ட்போஸ்ட்’ செய்தித் தளத்துக்கு அளித்த பேட்டியில் இதனையே குறிப்பிட்டுள்ளார்.

‘ஏப்ரல் 8 முதல் உயிரிழப்போரின் எண் ணிக்கை மிக வேகமாக அதிகரித்ததை எங்களால் உணரமுடிந்தது. குறிப்பாக, ஏப்ரல் 17-க்கும் 21-க்கும் இடைப்பட்ட நாட்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட உடல்கள் வந்தன.அவற்றில் மூன்றில் ஒரு பங்கு கொரோனாவால் இறந்தோருடையது. நானிருக்கும் பகுதியிலுள்ள மயானத்தில், ஒரு நாளில் 15 உடல்களைத்தான் மின்சாரம் வழியாக அடக்கம் செய்ய முடியும். அதனால் மீதமிருந்த அனைத்து உடல்களையும் எரிக்கவே செய்தோம். எங்களிடம் பிபிஇ எனப்படும் பாதுகாப்பு கவசமெல்லாம் எதுவுமில்லை. கடவுள்தான் எங்களை காப்பாற்றினார்’ என்று கூறியுள்ளார்.உடல்களை எரிப்பதற்கு மரக்கட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை வாரணாசியை சேர்ந்த மூங்கில் வியாபாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார். ‘எங்களுக்கு ஒரு நிமிடம் கூட ஓய்விருக்காது. தொடர்ச்சியாக ஆர்டர்கள் வந்த வண்ணம் இருக்கும். எங்கள் பகுதியிலிருந்து எல்லா கடையிலுமே நிலைமை இதுதான்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

 , இதில், 700-க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு உரிய சிகிச்சை கிடைக்
காததே மரணங்கள் அதிகரிக்கக் காரணம்என்றும், குறிப்பாக, கட்டணம் கூடுதலாக உள்ளதால், தாங்கள் சந்திக்கும் பொருளாதாரச் சிரமம் காரணமாக, மக்கள் மருத்துவமனைக்கு செல்ல முடிவதில்லை என்றும் கூறப்படுகிறது. அதிகக் கட்டணம் வசூலித்ததாக, வாரணாசியிலுள்ள 14 மருத்துவமனைகளுக்கு மாவட்ட நிர்வாகம் தற்போது நோட்டீஸ்அனுப்பியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக் கது.

இப்படி சொல்லொணா துயரத்தை வாரணாசி மக்கள் சந்தித்து வரும் நிலையில், கங்கை ஆற்றுடனும் வாரணாசியுடனும் அங்கு வாழும் மக்களுடன் தனக்கு சிறந்தஉறவு இருப்பதாக அடிக்கடி கூறிக் கொள்ளும்பிரதமர் மோடி, தொகுதிப் பக்கமே எட்டிப்பார்க்கவில்லை என்றும் தங்களை கைவிட்டுவிட்டார் என்றும் வாரணாசி மக்கள் வேதனைதெரிவிக்கின்றனர்.

;