india

img

கொரோனாவுக்கு ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 10 பேர் பலி.... ஆதித்யநாத்தை சாடும் உ.பி. பாஜக தலைவர்..

லக்னோ:
முதல்வர் ஆதித்யநாத்தின் தவறான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் உத்தரப்பிரதேசத் தின் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 10 பேர் உயிர் இழந்திருப்பதாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவரே குற்றச் சாட்டு எழுப்பியுள்ளார்.

கொரோனா 2-ஆவது அலையின் போது, மருத்துவமனைகளில் இடமில்லாமலும், ஆக்சிஜன் சிலிண்டர் கள் கிடைக்காமல் நோயாளிகள் மரத்தடிகளில் தஞ்சம் புகுந்த அவலம் உ.பி. மாநிலத்தில் நடந்தது. ஒவ்வொரு நாளும் மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தனர். உ.பி.சுடுகாடுகள் பிணங்களால் நிரம்பி வழிந்தன. எரிப்பதற்கு முடியாத பிணங்கள் கங்கைக் கரைகளில் புதைக்கப்பட்டதுடன், அதற்கும் நேரமில் லாத நிலையில் ஆற்றில் தூக்கி வீசப்பட்டன.அப்போதே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் உ.பி.முதல்வர் ஆதித்யநாத்தின் செயல் பாடுகள் படுமோசம் என்று ஒன்றிய அமைச்சர் சந்தோஷ் குமார் கங் கார், மாநில அமைச்சர்கள், எம்.பி.,எம்எல்ஏ-க்கள் புகார்க் கடிதங்களை எழுதினர். தனது பரேலி தொகுதியில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவது, மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிப்பதில் ஏற்படுகின்ற தாமதம் ஆகியவற்றை சந்தோஷ் கங்வார் வெளிப்படையாக பேசியிருந்தார். மூன்று மணி நேரம் காத்திருந்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை ஆக்ரா மருத்துவமனையில் சேர்க்க முடியவில்லை என்று ஜஸ் ரானா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராம்கோபால் லோதி கூறியிருந்தார்.

இந்நிலையில் பாஜக செயற்குழு உறுப்பினர் ராம் இக்பால் சிங்-க்கும், “உபி மாநிலத்தில் ஆதித்யநாத் தலைமையிலான அரசின் மோசமான மேலாண்மையால் ஒவ்வொரு ஊரிலும் கொரோனா 2-ஆவது அலைக்குகுறைந்தது 10 பேர் உயிர் இழந் துள்ளனர். கொரோனா முதல் அலையில் இருந்து அரசு எந்த ஒரு பாடமும் கற்கவில்லை என்பது இதனால்தெரிகிறது” என்று விமர்சித்துள்ளார்.

;