india

img

வாரணாசி மசூதி இடம் குறித்து தொல்லியல் ஆய்வு? அலகாபாத் நீதிமன்றத்திற்கு செல்ல சன்னி வக்பு வாரியம் முடிவு...

வாரணாசி:
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ‘ஞானவாபி மசூதி’ அமைந்துள்ள இடத்தில், காசி விஸ்வநாதர் ஆலயம் இருந்ததா? என ஆய்வு செய்து அறிக்கை வழங்குமாறு, இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகலாய மன்னர் அவுரங்கசீப், காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை அகற்றி விட்டு மசூதியை கட்டினார் என்றும்,ஞானவாபி மசூதி இருக்கும் நிலம் காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சொந்தமானது என்றும் விஜய் சங்கர் ரஸ்தோகி என்ற வழக்கறிஞர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.“மகாராஜா விக்ரமாதித்யா 2,050 ஆண்டுகளுக்கு முன்பு வாரணாசியில் குறிப்பிட்டநிலத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்தை கட்டினார். அதன் ஒரு பகுதியை 1669ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி இடித்துவிட்டு முகலாய பேரரசர் அவுரங்கசீப், ‘ஞானவாபி’ என்ற மசூதியைக் கட்டினார். எனவே மசூதி கட்டப்பட்டுள்ள அந்த இடம் இந்துக்களுக்கே சொந்தமானது” என்பது அவரின்வாதமாகும். 351 ஆண்டுகால சம்பவங்களை விவரிக்கும் ஆவணங்களும் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால்,அவற்றை ‘ஞானவாபி’  மசூதி நிர்வாகக்குழு மறுத்திருந்தது. இந்நிலையில், கடந்த1991-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு, வாரணாசி சிவில் நீதிமன்ற மூத்த நீதிபதி ஆசுதோஷ் திவாரி முன்னிலையில் வியாழனன்று மீண்டும் விசாரணைக்குவந்தது.  அப்போது, ஞானவாபி மசூதி அமைக்கப்படுவதற்கு முன்பாகவே காசிவிஸ்வநாதர் ஆலயம் அமைக்கப்பட்டி ருந்ததா? என இந்திய தொல்லியல் ஆராய்ச்சித்துறை (ASI) ஆய்வு நடத்த நீதிபதி ஆசுதோஷ் திவாரி உத்தரவிட்டார். 

இந்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறையின் கீழ் ஐந்து பேர் கொண்ட நிபுணர்குழுவை உத்தரப்பிரதேச அரசு நியமித்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும், அந்தக்குழுவில் குறைந்தது இரண்டு நபர்களாவது சிறுபான்மையினராக இருக்க வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே, வாரணாசி சிவில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு
செய்யப்படும் என்று உத்தரப் பிரதேச சன்னிமத்திய வக்பு வாரியம் தெரிவித்துள்ளது.

;