india

img

ரூ.1,500 கோடி ஊழல் செய்ததாக அகிலேஷ் மீது குற்றச்சாட்டு... தேர்தலையொட்டி சிபிஐயை ஏவிவிட்ட மோடி அரசு....

லக்னோ:
கோமதி நதிக் கரைகளை அழகுப்படுத்தும் திட்டத்தில் ரூ. 1500 கோடி ஊழல் நடந்திருப்பதாக கூறி, உ.பி. முன்னாள் முதல்வரும், எதிர்க்கட் சித் தலைவருமான அகிலேஷூக்கு சிபிஐ நெருக்கடியை ஆரம்பித்துள்ளது.பாஜக ஆளும் உ.பி.யில் உருவாகி 20 நகரங்களின் வழியாக சுமார் 200 கி.மீ. தூரம்பாய்வது கோமதி ஆறு. இது, உ.பி.யின் தலைநகரான லக்னோவில் மட்டும் 12 கி.மீ. தூரம் பயணிக்கிறது. இந்த நதியிலிருந்து லக்னோவிற்கு குடிநீரும் விநியோகம் செய் யப்படுகிறது.

இந்நிலையில், குஜராத் தின் அகமதாபாத்தில் சபர்மதிநதிக்கரைகள் அழகுபடுத்தப் பட்டதை போல், கோமதி நதியின் கரைகளையும் அழகுபடுத்த தனது ஆட்சியில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் முடிவு செய்தார். இதன்படிகோமதி நதிக்கரையில் பூங் காக்கள், உடற்பயிற்சிக்கான நடைபாதை, விளையாட்டு அரங்கங்கள், நிழல் தரும் மரங்கள் உள்ளிட்ட பல வசதிகள் செய்யத் திட்டமிடப்பட்டன. ரூ.1,600 கோடிக்கான இத்திட்டத்திற்கு அகிலேஷ் அரசு ரூ.1,437 கோடி நிதி ஒதுக்கியது. ஊழல் புகார்கள் காரணமாக, சுமார் 40 சதவிகிதம் மட்டுமே முடிந்த நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டன.

2017-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக முதல்வர்ஆதித்யநாத், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரணை நடத்தினார். அதன்பேரில் 2017ஜூலையிலேயே சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரைக்கப் பட்டது.இந்நிலையில், நான் காண்டுகளுக்குப் பிறகு திங்களன்று உ.பி, ராஜஸ்தான், தில்லி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நாற்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் திடீர்சோதனை நடத்திய சிபிஐ, முதற்கட்டமாக 173 தனியார் மற்றும் 16 அரசு பொறியாளர்கள் என189 பேர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளது. அகிலேஷ் பெயர் சேர்க்கப்படாவிட்டாலும், 2022 சட்டப் பேரவைத் தேர்தல் நேரத்தில் அகிலேஷின் செல்வாக்கைக் குறைக்கவும், அவரது பிரச்சாரத்தை முடக்கும் நோக்கிலேயே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

;