india

img

இடி, மின்னல் தாக்கி 68 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் நேற்று ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கிய சம்பவங்களில் மொத்தம் 68 பேர் உயிரிழந்துள்ளனர். 

வடமாநிலங்களான ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மத்தியப் பிரதேசத்தில் கடும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் இதுவரை 41 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 7 பேரும், ராஜஸ்தான் மாநிலத்தில் 20 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். உத்ரகாண்டில் கன மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னல், இடி தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், மின்னல் தாக்கியது மற்றும் நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும்,உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்

;