india

img

மோடிக்கு எதிராக யோகி ஆதித்யநாத் : ட்ரெண்டாகும் #YogiopposesModi ஹேஷ்டேக்

மோடியின் கருத்துக்கு எதிராக யோகிஆதித்யாநாத் செயல்படுகிறார்  என ட்விட்டரில் #YogiOpposesModi என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

உ.பி.யில் ரக்‌சா பந்தனை முன்னிட்டு 2 நாட்களுக்கு அரசுப் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு  இலவச பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

இலவச திட்டங்களால் நாட்டின் வளர்ச்சிக்கு மிக ஆபத்து என கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில், யோகி ஆதியநாத்தின் செயல்பாடு, மோடியின் கருத்துக்கு எதிராக உள்ளது என   #YogiOpposesModi என்ற ஹேஷ்டேக்கில் பதிவுகளை இட்டு எதிர்கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர்  பாஜகவின் இரட்டை நிலைப்பாட்டை விமர்சனம் செய்து வருகின்றனர்.

;