india

img

சொந்த மக்கள் சாகும்போது... தடுப்பூசியை ஏற்றுமதி செய்தது ஏன்? பிரதமருக்கு ஜார்க்கண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் கேள்வி....

ராஞ்சி:
சொந்த மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இல்லாத நிலையில், அவற்றைவெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்யவேண்டும்? என்று ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக,18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தையே,ஜார்கண்ட் அரசு நிறுத்தி வைக்க வேண் டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே அமைச்சர் பன்னா குப்தா இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.‘கொரோனா இரண்டாவது அலையால் ஜார்க்கண்ட் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 853 இறப்புகளைப் பதிவு செய் துள்ளது. தற்போது 58 ஆயிரத்து 806 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. 

இந்நிலையில், 18 முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்க நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம். இன்று மத்திய அரசுஎங்களுக்கு தடுப்பூசிகளைக் கொடுத் தால் கூட, நாளை முதல் இயக்கத்தைத் தொடங்குவோம். ஒரு நாளைக்கு சுமார் 4.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள் ளோம்.ஆனால், மத்திய அரசு எங்களுடன் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. ஜார்க்கண்ட் மக்களை சித்ரவதை செய்கிறது. தடுப்பூசி வழங்காமல் அவர் களை அவமதிக்கிறது. உயிர்காக்கும் மருந்துகளை வழங்குவதில் கூட பாரபட்ச அணுகுமுறையை கடைப்பிடிக்கிறது. நாங்கள் 50 லட்சம் டோஸ்கள் அளவுக்கு தடுப்பூசிகளை ஆர்டர் செய்தோம். ஆனால், இதனை மே 15-க்குப் பிறகுமே 30-க்குள் வழங்குவதாக மத்திய அரசுசொல்கிறது. சொந்த நாட்டு மக்கள் இறக்கும் போது வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை அனுப்புவதற்கு என்ன அவசியம் வந்தது?ஒரு மத்திய அரசாக, மாநிலங்கள் இடையிலான கூட்டாட்சி கட்டமைப்பை மதிக்க வேண்டும். ஆனால், மத்திய பாஜக அரசு அவ்வாறு இல்லை’ என்று பன்னா குப்தா கூறியுள்ளார்.

;