india

img

கொலை வழக்கு: குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002-ஆம் ஆண்டு குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் மேலாளராக இருந்த ரஞ்சித் சிங் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக குர்மீத் ராம் ரஹீம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இன்று இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அதன்படி, குற்றவாளிகள் குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு உத்தரவிட்டது. ஆயுள் தண்டனை உடன் சேர்த்து குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு  ரூ.31 லட்சமும், மற்ற குற்றவாளிகளுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டாவது ஆயுள் தண்டனை:

ஏற்கனவே, 2 பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு கடந்த 2017-இல் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ரோட்டக்கில் உள்ள சுனாரியா சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

இதுதவிர, ராம் சந்தர் சத்திரபதி என்ற பத்திரிகையாளர் கொல்லப்பட்ட வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 2 ஆண்டுகளுக்கு முன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

;